வியாழன், 28 நவம்பர், 2013

உங்கள் சிந்தனைக்கு



நன்றி-தீக்கதிர்  




மாவட்ட செயலக கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !!
     நமது மாவட்டசங்கத்தின்  செயலக கூட்டம் எதிர்வரும் 29/11/2013  வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நமது ங்க லுவலகத்தில்நடைபெறவுள்ளது.அனைத்துசெயலககூட்ட நிர்வாகிகளும் தவறாமல்கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

மாநிலச்சங்க சுற்றறிக்கை

செவ்வாய், 26 நவம்பர், 2013

TTA தேர்வு விதிகளில் மாற்றம் தேவை- மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம்

ஒரு சிறுமியின் வாக்குமூலம்


         சில தினங்களுக்கு முன்பாக திரு வாரூர் நகர கடைவீதிகளில் கையில் ஒரு தட்டில் 5, 10, 20 என ரூபாய் நோட்டுக்களை பரப்பி வைத்து அதன் நடுவே ஒரு குங்குமச்சிமிழில் குங்கு மத்தை வைத்துக்கொண்டு கடைகளி லும் வீடுகளிலும் ஒரு சிறுமி பிச்சை எடுத்து வந்தார்.

      இவளைப்போன்றே பல்வேறு வட இந்திய இளம்பெண் களும் வளரிளம்பெண்களும் பல் வேறு பகுதிகளில் பிச்சை எடுப்பதை காணலாம். சுமார் 8 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமியின் தோற்றமும், அவள் பேசிய அரைகுறை தமிழும் அவள் தமிழ் நாட்டை சேர்ந்தவள் அல்ல என நன் றாக உணர்த்தியது. சிறுமியின் இந்த காட்சியைப் பார்த்து பரிதாபப்பட்டவர் கள் உதவி செய்தனர். பலர் கைவிரித் தனர். ஆனாலும் அவளின் பயணம் தடைபடவில்லை. 

          அவள் தொடர்ந்து கடைகடையாக ஏறி இறங்கி தனது பணியை செய்து கொண்டிருந்தார்.ஒரு தேநீர் நிலையம் அருகே அச் சிறுமி வந்தபோது அங்கே கும்பலாக தேநீர் அருந்திக்கொண்டிருந்தவர் களிடம் யாசகம் கேட்டார். அக்கூட்டத் தில் இருந்த ஒரு நபர் காசு தரமாட் டேன். டீ குடிக்கிறாயா என்று கேட்டார். அவரின் கேள்வி சரியாக புரியா விட்டாலும் டீ என்ற ஒற்றைச் சொல் புரியவே அவளும் தலையாட்டினாள்.

        அவரும் டீ ஒன்றை வாங்கிக்கொடுத் தார். அவள் கையில் வைத்திருந்த தட்டை பவ்யமாக கீழே வைத்துவிட்டு டீயை ருசித்து சாப்பிட்டாள். அவள் டீயை அருந்திய விதம் காலை உண வை அவள் சாப்பிடவில்லையோ என யோசிக்க வைத்தது. பொதுவாக பலரும் பிச்சை எடுப் பவர்களிடம் அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு என்ன பிரச்சனை, ஏன் பிச்சை எடுக் கிறீர்கள் என்றெல்லாம் கேட்பதில்லை. 

             காரணம், அவரவர் பிரச்சனை அவர் களுக்கு. அந்த சிறுமியின் நிலை நம்மை சங்கடப்படுத்தியதால் அவளிடம் மெதுவாக பேச்சைக் கொடுத்து “ஏம்மா, நீ படிக்கவில்லையா’’ என்ற போது அவளுக்கு புரியவில்லை. உட னே சைகை மூலமாக கேட்டபோது அதனை புரிந்து கொண்டு “நஹி’’ என்று ஹிந்தியில் பதில் கூறினார். உனக்கு தமிழ் தெரியாதா என்றபோது “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்று குழந்தை தமிழில் பதில் கூறி னாள்.

          “சரி, எதற்காக பிச்சை எடுக் கிறாய், உனது அம்மா, அப்பா எங்கே இருக்கிறார்கள்” என்று கேட்டபோது அரைகுறையாக நமது கேள்வியைப் புரிந்து கொண்டு தனது அக்காவுக்கு திருமணம். அதற்காகத்தான் பிச்சை எடுத்து பணம் சேர்க்கிறேன் என்றாள். அப்பா, அம்மா, அக்கா எல் லோரும் நாகூரில் ஒரு கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறோம்.

          அனைவரும் காலையில் எழுந்து இவ்வாறு ஆளுக்கு ஒரு பக்கம் பிச்சை எடுக்க சென்று விடுவோம். மாலையில் சந்திப்போம் என்றாள்.இந்த உரையாடலின்போது மிக வும் சிரமப்பட்டுத்தான் அச்சிறுமியிட மிருந்து பதில் பெற முடிந்தது. கார ணம், மொழி புரியாத சிக்கல் அதற்கு தடையாக இருந்தது. ஆனாலும் அவள் தட்டுத்தடுமாறி இந்தியும் தமிழுமாக நமது கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.

        “சரி, உனக்கு எந்த ஊரம்மா” என்று நமக்கு தெரிந்த சுமா ரான `ஹிந்தியில் “துமாரா ஜன்மஸ் தான் க்யா ஹை?’’ என்று கேட்ட போது கேள்வியை புரிந்து கொண்டு பளிச்சென்று குஜராத் என்று பதிலளித் தார். வளர்ச்சியின் நாயகன் என்று கூறிக்கொண்டு நாடு முழுவதும் பிரத மர் நாற்காலி கனவில் பேசிவரும் மோடி ஆட்சி செய்யும் மாநிலமா என்று நம் மனதுள் கேள்வி எழுந்தது. இதுதான் அவர்கள் கூறும் வளர்ச்சி போலும்.

               ஒரு சின்னஞ்சிறு சிறுமி திட்ட மிட்டு பொய்யாக தனது ஊர் குஜராத் என்று கூறப்போவதில்லை. அப்படி கூறவும் அவருக்குத் தெரியாது. ஏனென்றால் குழந்தைகளுக்கு பொய் பேசத்தெரியாது. எனவே அவள் குஜராத் என சொன்னதை நம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. இந்திய மாநிலங்களில் குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் வளர்ச்சி என்பது விடுதலை பெற்ற இந்தியா வில் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும்.

             அந்த மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடு தலை அடைந்தபிறகு பல ஆண்டுகள் குஜராத்தை காங்கிரஸ் கட்சிதான் ஆண்டு வந்தது. தற்போது நரவேட் டை மோடி மூன்றாவது முறையாக முதல்வராக நீடிக்கிறார். தற்போது ஆர்எஸ்எஸ் ஆசீர் வாதத்தோடு பிரதமர் பதவி வேட் பாளராக பாரதிய ஜனதாவால் கள மிறக்கப்பட்டுள்ள அவரை இந்திய நாட்டின் கார்ப்பரேட் முதலாளிகள், அதே போன்று அந்நிய நாட்டு முத லாளிகளும் தூக்கிப்பிடித்து ஏராள மான பொருட்செலவில் விளம்பரப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் நாட்டு மக்களின் உணர் வும் எண்ணமும் அவர்களின் எண் ணம் பலிக்கப்போவதில்லை என் பதையே காட்டுகிறது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த குஜராத் சிறுமியின் வாக்குமூலமே குஜராத் வளர்ச்சியின் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

          வீக்கத்தை வளர்ச்சி என்று கூறும் கோயபல்ஸ்காரர்களிடமிருந்து நமது நாட்டைக்காப்பாற்றுவது என்பதே மேற்கண்ட சம்பவம் மூலம் நமது கடமையாகிறது. இந்தியாவின் உண் மையான வளர்ச்சி என்பது கொள்கை மாற்றத்தில்தான் உள்ளது. ஆள் மாறாட்டத்தில் அல்ல. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தல் வேள்வியில் ஆயிரம் கேள்வி களால் பெரும்பான்மை மற்றும் சிறு பான்மை மதவெறியர்களை துளைத் தெடுப்போம். 

        மக்கள் ஒற்றுமையைக் காக்க களம் காண்போம்.குஜராத் சிறுமி என்பவளின் பிரச் சனை ஒரு சிறுமி சம்பந்தப்பட்ட பிரச் சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தி யாவின் முகத்தோற்றத்தை அச்சிறுமி யின் குடும்பத்தின் சூழல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே தேசத்தைப் பாதுகாக்க மாற்றுக்கொள்கைகளோடு மக்களை சந்திப்பது அவர்களை அந்த திசை வழியில் திரட்டுவது அவசியமான ஒன்றாகிவிட்டது.(ந.நி.)
நன்றி தீக்கதிர் 26.11.2013

வியாழன், 21 நவம்பர், 2013

GPF - க்கான நிதி ஒதுக்கீடு......

அன்பார்ந்த தோழர்களே !

     GPF -  க்கான    நிதியினை ஒதுக்கிட வலியுறுத்தி நமது பொதுச்செயலர் இன்று இயக்குனர் நிதியினை (Director Finance)  சந்தித்தார். எதிர்வரும் திங்கள் கிழமை அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று  இயக்குனர் நிதி அவர்கள்  உறுதி அளித்ததாக நமது பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்.

சர்வீஸ் சிம்

அன்பார்ந்த தோழர்களே !
     
          தமிழ்மாநில கூட்டுஆலோசனை குழு முடிவின்படியும் நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியினாலும்  கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் 30% ஊழியர்களுக்கு SERVICE SIM வழங்கிட மாவட்ட நிர்வாகம் உத்திரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இயக்குனர்களுக்கு -22, எழுத்தர்களுக்கு -21,டெலிக்ராப் மாஸ்டர்கள் -4, டெலிக்ரப் எழுத்தர் -6,  மற்றும் RM Group D தோழர்கள் -14 ஆகமொத்தம் 67 தோழர் தோழியர்களுக்கு பயன்கிடைக்கும். 

சென்னையில் நமக்கான மருத்துவமனைகள்

புதன், 20 நவம்பர், 2013

தேசிய கவுன்சில்

தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 09-12-2013 அன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

போனஸ்

உற்பத்தி திறனுடன் இணைந்த இன்சென்டிவ் விசயமாக புதிய பார்முலா உருவாக்கிட கூட்டுகுழு அமைக்கப்பட்டுள்ளது .தேசிய கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலர் இதன் ஊழியர் தரப்பு உறுப்பினர்களாக இருப்பர் .கடிதம் பார்க்க :-Click Here

ஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு

ஜம்மு காஷ்மீர் மாநில 2 நாள் மாநில மாநாடு  ஸ்ரீநகரில் உற்சாகமாக தொடங்கியது.செய்தி பார்க்க ClickHere

செய்தி .துளிகள்

மத்திய  அரசு இனி BSNL மற்றும் MTNL தொடர்புகளையே பயன்படுத்த வேண்டும்--மத்திய அரசு முடிவு
    செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொலைதொடர்பு துறை செய்தி தொடர்பாளர் இனி மத்திய அரசு அலுவலகங்களில் BSNL மற்றும்  MTNL லேண்டலைன் பிராட்பேண்டுகளை பயன்படுத்த வேண்டுமென அரசு  முடிவு செய்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான BSNL மற்றும்  MTNL நிறுவனங்களை  சரிவிலிருந்து மீட்கவே இந்த முடிவு என்றார். இதற்கான அமைச்சரவை முடிவு கூடிய சீக்கிரம் வெளியிடப்படும். இதுவரை மத்திய அரசு நிறுவனங்கள் மற்ற தனியார் AIRTEL & VODAFONE  இணைப்புகளை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவை உடனடியாக சரண்டர் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதே போல மாநில அரசும் செயல்படுத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி கூறினார் . BSNL மற்றும் MTNL-மேம்படுத்த அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பதை  அனைவரும் அறிவோம். அதன் தலைவராக மத்திய அரசின் நிதி அமைச்சர் .சிதம்பரம் இருக்கிறார். அவரின் கவனத்திற்கும் இந்த முடிவு கொண்டு செல்லப்படும்.

செவ்வாய், 19 நவம்பர், 2013

7 வது அனைத்திந்திய மாநாடு

       நமது BSNL ஊழியர் சங்கத்தின்  7 வது அனைத்திந்திய மாநாடு வரும் நவம்பர் 2014-லில் கொல்கத்தா நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக நமது மத்திய சங்கம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தா டெலிபோன்ஸ்,டெலிகாம் பாக்டரி மற்றும் டெலிகாம் ஸ்டோர் ஆகிய மாநிலங்கள் இணைந்து அனைத்திந்திய மாநாட்டை நடத்தும் .

TTA ஆளெடுப்பு விதிகள் மாற்றம்

கார்போரட் நிர்வாகம் TTA ஆளெடுப்பு விதிகளுக்கான வரைவை வெளியிட்டு உள்ளது . வரைவை  பார்க்க :-Click Here

இந்திய வரலாற்றை திரித்தல்

    எத்தனை செண்டுகள் பூசினாலும் உங்கள் கைகள் மணக்காது

           2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சூழ்நிலைகளில் அல்ல’’ என்று மாமேதை மார்க்ஸ் ஒருதடவை சொல்லி இருந்தார். அந்தச் சூழ்நிலைகள் அவர்களுக்கு ஆதரவானதாக இல்லாமல் இருக்கலாம், உண்மையில் நாம் சுதந்திரம் பெற்ற சமயத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு ஆதரவான நிலையில் சூழ்நிலைமைகள் இல்லாமல் தான் இருந்தது.
            எனவேதான் நாம் இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியபோது, ஆர்.எஸ்.எஸ் கூடாரம் இந்தியாவை ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன் மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றிட சாதகமான சூழ்நிலை இருப்பதாக அனைவரையும் நம்ப வைப்பதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டன. நம் நாட்டில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றுக் கிடையிலும் ஒற்றுமையுடன் வளர்ந்து வந்த நம் நாகரிக வரலாற்றைச் சிதைத்தும், திரித் தும் கூறுவதன் மூலம் மட்டுமே அவ்வாறு சூழ்நிலை இருந்தது என்று மக்களை நம்ப வைக்க முடியும்.
         ‘இந்தியாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள், இந்துக்கள் மட்டுமே, எவ்வித இடையூறு மின்றி மிகவும் பெருமைகொள்ளும் விதத்தில் வாழ்ந்தார்கள்’ என்று இந்தியாவின் வர லாற்றைச் சித்தரிப்பதன் மூலம் மட்டுமே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். தற் போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்பும் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கான அவர்களு டைய தத்துவார்த்த அடித்தளங்களின் மையக்கூறு இதுவேயாகும். இந்தியாவின் வரலாற்றை அவர்கள் விரும்பும் வண்ணம் திரித்து மாற்ற முயலும் போது ஆர்.எஸ்.எஸ். பல்வேறு பிரச்சனை களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றிற்கான சாட்சியங்கள் பலவற்றை இதற்காக அது மாற்றிட வேண்டிய கட்டாயத் திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இவற்றில் மிகவும் முக்கியமான பகுதி என்பது இந்திய மக்களின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். முழுமையாகவே பங்கேற்காது ஒதுங்கி இருந்ததாகும்.
             இவ்வாறு ஒதுங்கி இருந்ததற்கான காரணங்களை மக்கள் மத்தியில் விளக்க முடியா நிலையில் அது இருக்கிறது. ஒரு காலத்தில் அவர்களுடைய தத்துவ ஆசானாக விளங்கிய நானாஜி தேஷ்முக் தன்னுடைய புத்தகமொன்றில் ஆர்.எஸ்.எஸ். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் விலகி இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இந்து மத உணர்ச்சிகளை மக்கள் மத்தியில் விசிறிவிட இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, முஸ்லீம் லீக் கட்சியும் முஸ்லீம்கள் மத்தியில் மத உணர்வைக் கிளப்பிவிடுவதற்கும் அதன் மூலம் பிரிட்டிஷார் தங்களுடைய ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் பங்களிப்பினைச் செய்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் சம்பந்தப் பட்ட நபர் ஒருவர் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டுமானால் ஒரேயொரு வரைத்தான் சொல்ல முடியும். அது வி.டி. சாவர்கர் மட்டுமேயாகும். இந்துத்துவா கொள்கைப் பிடிப்புள்ள வரலாற்றாசிரியர் ஆர்.சி.மஜும்தார் அந்தமான் செல்லுலர் சிறைகளில் இருந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து ஆவணப்படுத்தியுள்ளார்.
             அவ்வாறு அவர் எழுதியுள்ளதில் வி.டி.சாவர்கர்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷாரிடம் எவ்வாறெல்லாம் கூழைக் கும்பிடு போட்டுள்ளார் என்பதை விவரித்துள்ளார். இந்த சாவர்கர்தான் இந்து மகாசபைக் கூட்டம் ஒன்றில் தலைமையுரை ஆற்றுகையில் இந்தியாவில் இரு தேசங்கள் இருக்கின்றன, அவை இந்து மற்றும் இஸ்லாமிய தேசங்கள் என்று முதன் முறையாக ஒரு கருத்தை முன்வைத்தார். முகமது அலி ஜின்னா தன்னுடைய இரு தேசக்கொள்கையை முன்வைத்து நடை முறைப்படுத்த முயல்வதற்கு ஈராண்டுகளுக்கும் முன்பே வி.டி.சாவர்கர் இவ்வாறு கூறி னார். இவ்வாறான இவர்களுடைய இரு தேசக் கொள்கையை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாட்டைப் பிரித் திடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அதேபோன்று ‘இந்துத்துவா’ என்ற சொல்லையும் உருவாக்கியது வி.டி.சாவர்கர் தான். அவ்வாறு இந்தச் சொல்லை அவர் உரு வாக்கும்போது இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்றும் இரண்டுக்கும் அநேகமாக எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் கூறி னார்.
மேலும் இந்து தேசத்தை உருவாக்கிட அவர் ஒரு கோஷத்தை முன்வைத்தார். அதாவது, ‘‘ராணுவத்தை இந்து மயமாக்குங்கள், இந்து தேசத்தை ராணுவமயப்படுத்துங்கள்’’ என்றார். இந்தக் கோஷம்தான் இந்துத்வா பயங்கரவாதத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக் கும் உந்துசக்தியாக இருந்திருக்கிறது.இந்தக் குறிக்கோளை இந்துத்வாவாதி கள் எய்த வேண்டுமானால், மதவெறியைக் கூர்மைப்படுத்துவதுடன், நாட்டின் வரலாற் றையும் மிகப்பெரிய அளவிற்கு மாற்றி எழுத வேண்டியது அவசியமாகும். ‘‘நாங்கள் மத்தி யில் ஆட்சிக்கு வரும்போது, பாடப்புத்தகங் களை மாற்றி எழுத இருக்கிறோம்’’ என்று பாஜகவின் முன்னாள் தலைவர் ஒருவர் பேசியதை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின் றன. (இந்துஸ்தான் டைம்ஸ், 2013 ஜூன் 24). ‘‘இவ்வாறு செய்வதற்கு முன்பும் முயற்சித் தோம், மீண்டும் முயற்சிப் போம்’’ என்று அவர் கூறியிருக்கிறார். அன் றைய தினமே அத்வானியும், ‘‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத் திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது விதியை ரத்து செய்வதற்காக நாடு இன்னமும் காத்துக் கொண்டி ருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.
             ஆர்.எஸ்.எஸ் கூடாரம், சர்தார் வல்லபாய் பட்டேலைத் தவறாகப் பயன்படுத்த மேற் கொண்டுள்ள சமீபத்திய முயற்சிகள் ‘‘இந்து தேசம்’’ என்னும் தங்கள் குறிக்கோளை உயர்த்திப் பிடிப்பதற்காக இந்தியாவின் வர லாற்றைத் திருத்தி எழுதுவதற்கான ஒட்டு மொத்த முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடைசெய்து சர்தார் பட்டேல் வெளியிட்ட அறிக்கை குறித்து இப்பகுதியில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். சர்தார் பட்டேல் ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறி சித்தாந்தத் திற்கு முற்றிலும் எதிரானவர் என்பதையே இது காட்டுகிறது.
  யினும் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர், வரலாற்றை எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி சிதைத்தும் திரித்தும் ‘‘தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை’’ உருவாக்குவதற்காக, அவசர கதியில் புதிதாக ஒரு ‘வரலாற்றை உருவாக்க’ முயல்வது போலவே தோன்றுகிறது. சர்தார் பட்டேலின் புரவலர் என்று தன்னைச் சித்தரிக்க முயற் சிப்பதுடன், பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் மோடி, தட்சசீலம் (தற் போது அது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கிறது) பீகாரில் இருந்ததாக உரிமை கொண்டாடி யிருக்கிறார். அவர் மேலும், பீகாரில் கங்கை நதிக்கரை யோரம்தான் அலெக்சாண்டர் இறந்தார் என்றும் கூறி யிருக்கிறார். என்னே ஆச்சர்யம்! பின்னர். ஒரு நேர்காணலின்போது, ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேலுடன் தங்களுக்குள் தீர்க்கப்பட முடியாத அளவிற்கு அரசியல் கருத்து வேறுபாடுகளின் காரணமாக, சர்தார் பட்டேலின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார் என்று அளந்திருக் கிறார். பின்னர் இந்த உண்மையின்மையை பல்வேறு தரப்புகளில் இருந்தும் வந்த தாக்குதலைத் தொடர்ந்து அவர் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
             அதேபோன்று, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உண்மையில் இறந்ததற்கு இருபதாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று கூறியது குறித்தும், அவர் குஜராத்தின் பெருமைமிகு புதல்வர் என்றும் கூறியிருந்தார். இவ்வாறு வரலாற்றைத் திரித்துக் கூறியமைக்காக மீண்டும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல, இதே போன்று எல்.கே.அத்வானியும் வரலாற்றைத் திரிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டி ருக்கிறார். எம்.கே.கே.நாயர் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றை மேற்கோள்காட்டி, ஹைதராபாத் மாகாணத்தில் போலீஸ் நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பட்டேலை நேரு ஒரு ‘வகுப்புவாதி’ என்று அழைத்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை வரலாறு என்ன? அத்தகையதோர் அமைச்சரவைக் கூட்டம் 1948 ஏப்ரலில் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் திருவாளர் எம்கேகே நாயர் ஐஏஎஸ் அதிகாரி யாகப் பணியில் சேர்ந்ததே 1949இல்தான். மேலும், அத்வானி, அப்போது இந்திய ராணுவத் தளபதியாக இருந்த சர்ராய்புச்சர் என்பவர், 1948 செப்டம்பரில் ஹைதராபாத் தில் நடைபெற்ற போலீஸ் நடவடிக்கை தொடர்பாக மற்றொரு வெள்ளைக்காரனான பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு சில தகவல்களைக் கசிய வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு அதற்காக ராஜினாமா செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டார் என்றும் கூறியிருக்கிறார். இதுவும் உண்மையல்ல. மேற்படி புச்சர் 1949 ஜனவரி 15 வரை, அதாவது ஜெனரல் கரியப்பா பொறுப்பேற்கும் வரை, ராணுவத் தளபதியாக தொடர்ந்து பணி யாற்றி இருக்கிறார்.
              இதுபோல் எல்.கே. அத்வானியும் தன் பங்கிற்கு வரலாற்றைத் திரித் தும் சிதைத்தும் கூறிக் கொண்டிருக்கிறார். தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தங்கள் சித்தாந்தமான ஓர் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்காக, இவர்கள் இவ்வாறு என்னதான் வரலாற்றைச் சிதைத்திடவும் திரித்திடவும் முயற்சிகள் மேற்கொண்டாலும்,நம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குலைப்பதில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் வெற்றி பெறமுடியாது. சிறந்ததோர் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதற்காக நடைபெற்று வரும் மக்கள் போராட்டங் களையும் இவர்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது. நம் மக்களுக்காக சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான முக்கியமான பிரச்சனையிலும், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் மவுனம் சாதிக்கிறது. ஏனெனில்,நாட்டுமக்களில் பெரும்பான்மையோருக்குத் துன்பங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தி வரும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங் களை இக்கூட்டமும் தாங்கிப் பிடிப்பதேயாகும்.

 

(தமிழில்: ச.வீரமணி)

நன்றி-தீக்கதிர்     



கார்ட்டூன்








நன்றி-தீக்கதிர்



ஞாயிறு, 17 நவம்பர், 2013

குழந்தைகள் தினவிழா

அன்பார்ந்த தோழர்களே !
        கடலூர் மாவட்ட BSNL  நிர்வாகத்தின்  சார்பில் 14-11-2013 அன்று மாலை அரசு சேவைஇல்லத்தில் சமுக நலத்துறையுடன் இணைந்து குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நமது முதுநிலை பொதுமேலாளர் தலைமையேற்று சிறப்பு செய்தார். மேலும்  BSNL  நிர்வாகத்தின்  சார்பில் நலத்திட்ட உதவிகளை சேவை இல்லத்திற்கு வழங்கினார். மிதிவண்டி, எமர்ஜென்சிலேம்ப், சமையல்உபகரணங்கள், நோட்டு புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிஸ்கட் வழங்கப்பட்டது. விழாவில் துணைப்பொதுமேலாளர்கள் நிதி, நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . தொழிற்சங்கத் தலைவர்கள் தோழர் R.ஸ்ரீதர், தோழர் P.வெங்கடேசன், தோழர் T.ராமலிங்கம் ஆகியோர்    கலந்துகொண்டு சிறப்பித்தனர். நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம்,திண்டிவனம் தோழர் S.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். SDE மார்க்கெட்டிங் P. சிவக்குமரன் நன்றியுரை ஆற்றினார். சிறியஅளவில் இருந்தாலும் நல்ல முடிவு எடுத்து  மிகக்குறைந்த கால அவகாசத்தில்  சிறப்பான ஏற்பாடுகளை செய்த மார்கெட்டிங் பிரிவிற்கு  நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.


அனைத்து சங்கங்களின் கூட்டம்

பிஎஸ்என்எல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி குறித்து விவாதிக்க  அனைத்து சங்கங்களின் கூட்டத்தை நடத்தவேண்டும் என்ற நமது மத்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க BSNL நிர்வாகம் எதிர்வரும் 30-11-2013 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கடிதம் பார்க்க :-Click Here

மகளிர் பயிலரங்கம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

கோவையில் 08-12-2013 அன்று நடைபெறுவதாக இருந்த மகளிர் பயிலரங்கம்-14.12.2013தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

சனி, 16 நவம்பர், 2013

வேண்டாம் நிதி குறைப்பு
          இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த ஜனநாயக நாட்டில் சரியான பொருளாதார முடிவுகளை எடுப்பது எளிதல்ல. நாட்டு மக்களின் நலனையும் பார்க்க வேண்டும், நிர்வாகத்தையும் சீராக நடத்த வேண்டும். மத்திய அரசு இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாகத்தான் சிக்கலில் மாட்டியிருக்கிறது.உலக அளவில் பொருளாதாரம் இன்னமும் வழக்கமான வேகத்தை எட்டவில்லை. நம்முடைய ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கிறது. கச்சா பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி, சமையல் எண்ணெய், பருப்புகள் போன்றவற்றின் இறக்குமதிக்கு அதிகம் செலவாகிறது. அதிகம் செலவுசெய்து, பற்றாக்குறையை அதிகப்படுத்த வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

           அரசுக்குக் கடன் தரும் வெளிநாட்டு, சர்வதேச நிறுவனங்களும் அதே யோசனையைத் தெரிவித்துள்ளன.இந்தச் சூழலில்தான் அரசு முதலில், திட்டம் சாராத இனங்களில் செலவுகளை 10 சதவீதம் குறைத்தது. இப்போது திட்டச் செலவுகளிலேயே சுமார் 15,000 கோடி ரூபாய் அளவுக்குக் குறைக்க உத்தேசித்துள்ளது.

             இதனால் வேலைவாய்ப்பு, சுகாதாரம், தண்ணீர், வீடமைப்பு, மின்சார இணைப்பு ஆகியவற்றை வழங்குவதில் பெருத்த பின்னடைவு ஏற்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், இந்திரா வீடமைப்புத் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டில் தலா ரூ.2,000 கோடியும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தில் ரூ.9,000 கோடியும், தொடக்கக் கல்விக்கான திட்டங்களில் ரூ.2,500 கோடியும் உயர்நிலைக் கல்வித் திட்டங்களில் ரூ.3,000 கோடியும் குறைக்கலாம் என்று செலவுகள் துறை அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளன.

             ஆனால், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இந்தச் செலவுகள் நிதியாண்டின் பிற்பகுதியில்தான் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் இவற்றைக் குறைப்பதால் இந்தத் திட்டங்களின் நோக்கங்களையே சிதைத்துவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.இந்தச் செலவுகளைக் குறைப்பதால் நாட்டு முன்னேற்றத்தில் பின்னடைவுதான் ஏற்படும். மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்தத் திட்டங்கள் மூலம் மத்திய அரசு வழங்கிவரும் மானிய உதவி கணிசமாகக் குறையும். திட்டச் செலவைக் குறைப்பதால் திட்டங்கள் பூர்த்தியாகாமல் அரைகுறை நிலையில் இருக்கும். அடுத்த நிதியாண்டில் இதை சீர்செய்ய மேலும் அதிக நிதி தேவைப்படும்.நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி போன்றவை பெரும்பாலும் வீணாகவே செலவழிக்கப்படுகிறது என்று பொதுக்கணக்குக் குழு, தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் போன்றவை கூறிவருகின்றன. அப்படிப்பட்ட செலவுகளை தீவிரமாகக் கண்காணித்து முறைப்படுத்துவது விவேகமாக இருக்கும்.

     பொருளாதாரம் சார்ந்த முடிவுகளைவிட அரசியல்ரீதியிலான முடிவுகளால்தான் இந்திய அரசுக்குச் சிக்கலே வருகிறது. கல்வி, சுகாதாரம், சாலை வசதி, கிராமப்புற மேம்பாடு போன்றவற்றுக்கு நாம் ஒதுக்கும் தொகைகளே போதாது. அப்படியிருக்க அந்தச் செலவுகளையும் குறைப்பது என்பது நமக்கு எந்த விதத்திலும் நன்மையைத் தராது.

நன்றி : தி இந்து தமிழ்(நவம்பர்15) தலையங்கம்



புதன், 13 நவம்பர், 2013

தோழியர் K .K .விஜயா ( SR TOA கேரளா மாநிலம்)--- நெகிழ்ச்சி....

அன்பார்ந்த தோழர்களே !
    நவம்பர் 6 முதல் 8 வரை கேரள மாநிலச்சங்கத்தின் 7 -வது மாநில மாநாடு கோட்டயத்தில் நடைபெற்றது. நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதற்குப்பின்னர் தோழர்,தோழியர்களுக்கு சந்தேகங்கள்,விளக்கங்கள் கேட்கலாம் என வழக்கம்போல் அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களது சந்தேகங்களை,விளக்கங்களை சீட்டில் எழுதி கொடுத்தனர். அதில் ஒரு சீட்டில் எழுதி இருந்ததை நமது பொதுச்செயலர் முகமலர்ச்சியோடு படிக்கிறார். அக்கடித வாசகம் ....
    "  தோழர், என் மொத்த மாத சம்பளம் இப்போது அரை லட்சத்தை தாண்டிவிட்டது. நான் கனவில் கூட நினைத்தது இல்லை  ஒரு நாள் எனது சம்பளம் அரை லட்சத்தை தாண்டும் என்று. என் வாழ்வில் எதிர்பார்த்ததும். இல்லை BSNL ஊழியர் சங்கத்தால்  மட்டுமே இதை சாத்தியமாக்க  முடிந்தது  "     அந்த  சீட்டை எழுதிக்கொடுத்தவர் பாலக்காட்டைச் சேர்ந்த தோழியர் K .K .விஜயா( SR TOA).

காஸியாபாத் பொதுமேலாளர் இடமாற்றம்

அன்பார்ந்த தோழர்களே!
நவம்பர் 16, 2012-ல் யுனைட்டெட் போஃரத்தின் சார்பில் நாம் நடத்திய வேலைநிறுத்தத்தின்  காரணமாகவும் நமது மத்தியசங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாகவும் BSNL ஊழியர்சங்கத்தின் காஸியாபாத் மாவட்டசெயலர் தோழர் சுகேந்தர் பால் சிங் கொலையில் தொடர்புடைய காஸியாபாத் பொது மேலாளர் அதேஷ் குமார் குப்தா வை கார்ப்பரேட் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது. 

செவ்வாய், 12 நவம்பர், 2013

விடுமுறை நாள் மாற்றம்

அன்பார்ந்த தோழர்களே !
                                                       மொஹரம்  பண்டிகைக்கான  BSNL விடுமுறை 14-11-2013 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்பொழுது 15-11-2013 (வெள்ளி கிழமை) என மாற்றப்பட்டு கார்ப்பரேட் அலுவலகம் இன்று உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

       மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் அதிரடியாக இன்று ரத்து செய்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 13 ஆயிரம் பேரையும் டிஸ்மிஸ் செய்தார் முதல்வர் ஜெயலலிதா. இதை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மக்கள் நலப்பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்து தமிழக அரசு பணிநீக்கம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் அனில் தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பான உடன்படிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர். ஏழைப் பணியாளர்களை அலைக்கழிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். அத்துடன் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டனர்.
நன்றி-- ஹிந்துநாளிதழ் 12.11.2013

கபடநாடகம் மாநிலச்சங்க சுற்றறிக்கை

திங்கள், 11 நவம்பர், 2013

A I B S N L E A அகில இந்திய மாநாட்டில் நமது பொதுச்செயலர்


bsnleucdl11-11-2013 அன்று A I B S N L E A அகில இந்திய மாநாட்டில் நமது பொதுச்செயலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது  FORUM OF BSNL சங்கங்கள் மற்றும்  அசோசியேஷனால் நாம் சாதித்தவற்றை நினைவுகூர்ந்தார். மேலும் இதை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் சுட்டிக்காட்டினார் .வேலை கலாச்சாரத்தை மேம்படுத்த்த வேண்டிய அவசியத்தையும் அதே நேரத்தில் அரசின் தனியார்மய ஆதரவு கொள்கைக்கும் , பொதுத்துறை விரோத போக்கிற்கும் எதிராக போராட வேண்டிய கட்டாயத்தையும் அவர் சுட்டிக் காட்டினார் .

படிக்கக் கூடாத கடிதம். ஆனாலும் உங்கள் பார்வைக்கு......



அன்புள்ள பிரீதம்,
எனது அன்பு முத்தங்கள். நேற்றோடு 79 முறை சிறையில் கம்பிகளுக்கு அப்பால் இருந்து என்னை பார்த்துச் சென்றாய். இப்போது எந்த நாளையும் விட நேற்றைய தினம் உனது வருகை என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது. நேற்றோடு நமக்கு திருமணம் நடந்து 4 ஆண்டு கள் ஆகிவிட்டன. நமது திருமண நாளை நினைவுபடுத்தாமலேயே என்னை நீ பார்த்துச் சென்றாய். எனக்கு நினைவு இருந்த போதும் அதை உனக்கு சொல்லுகிற தைரியம் இல்லாத தால் நானும் உன்னிடம் பேசவில்லை. இனி மேல் அடிக்கடி நீ என்னை சிறையில் வந்து சந் திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.சிறைக்கு வந்த சில வாரங்கள், தினந்தோறும் நீயோ, நமது உறவினர்களோ என்னைப் பார்க்க வரவேண்டும் என்று நான் ஏங்கியிருக்கிறேன். சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரைச் சொல்லி என்னை சந்திக்க வேண்டுமென்று அவர்களிடம் வேண்டிக் கொள்ள உனக்குக் கூறி யிருந்தேன்.

உனக்கு நினைவிருக்கிறதா, வாரம் இருமுறை சந்திப்பதற்கு வாய்ப்பிருந்தும் போன ஆண்டின் ஒரு வாரத்தில் ஒரு நாள் நீ வராத போது நான் மிகவும் துடித்துப் போனேன். அடுத்த முறை சந்தித்த போது நான் அழுவதைப் பார்த்து என்னிடம் ஏன் என்று கேட்டாய்? நான் அதற்கு பதிலேதும் சொல்லவில்லை. அம்மா மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டிருந்ததையும் அவர்களோடு நீ இருந்ததையும் நீ எனக்குச் சொல்லவில்லை. ஆனால், பின்னர் வழக்கறிஞர் மூலம் அதை நான் தெரிந்து கொண் டேன். ஆனால், இப்போது நான் சிறையிலிருந்து வெளிவரும் வரை என்னைப் பார்க்க வராமல் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது. என்னைப் போல இன்னும் 146 பேர் என் னோடு பணிபுரிந்தவர்கள் ஒரு வருடத்திற்கு மேலாக இந்த சிறைச் சாலைக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறோம். அவர்களில் பலரது அம்மா வோ, மனைவியோ அவர்களை வாரா வாரம் சந்திப்பதில்லை.

நிரந்தர வருமானமற்று போன தால் குழந்தைகளை படிக்க வைக்க, பெற் றோரை மருத்துவரிடம் கவனிக்க என்று எத்த னையோ செலவுகளுக்காக வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் சிறைச் சாலைக்கு வருவது என்பது ஒரு நாள் உணவை இழக்க வேண்டும் என்பதோடு இன்னொரு நாள் உணவுக்கான பணத்தை பயணத்தில் இழக்க வேண்டியிருக்கிறது.சிறையில் இருப்பவர்களுக்கு வெளியிலிருப் பவர்கள் அடிக்கடி பார்த்துவிட்டு செல்வது ஒரு மிகப்பெரிய ஆடம்பரம். என்னோடு வேலை செய்து இப்போது சிறையில் இருக்கிற இதர 146 பேரில் பலருக்கும் உறவினர்களை பார்க்கும் இந்த வாய்ப்பு இல்லாத போது அந்த ஆடம்பரத்தை நான் அனுபவிப்பது ஒரு அந்நியப்பட்டுப் போன உணர்வை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் என்னைப்போலவே 25க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர். சிலருக்கு திரு மணமாகவில்லை. பலருக்கும் கைக்குழந் தைகள் இருக்கிறார்கள்.உனக்கு நினைவிருக்கும், சிறைச்சாலைக்கு வந்த சில நாட்களில் நீ என்னைப் பார்க்க வந்த போது மிகப்பெரிய தைரியத்தோடும் தெம்போடும் உனக்கு ஆறுதல் சொன்னேன். விரைவில் ஜாமீனில் வெளியே வந்துவிடுவேன். என் மீது போடப்பட்ட வழக்குகள் பொய் என்பதை நிரூபிப் பேன்.

பொய் வழக்குப் போட்டவர்களை சட்டத் தின் முன்னாள் நிறுத்துவேன் என்று உன்னிடம் கூறியிருந்தேன். நான் சிறைக்கு வரும் முன்பாக அந்த தொழிற்சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை. அவர்கள் மீது எனக்கு வெறுப்பு இருந்த தும் கிடையாது. ஆனால், இன்று அந்த தொழிற் சாலையின் வாயிலுக்கு முன்னாள் ஓங்கி வளர்ந்த ஒரு கம்பத்தை நட்டு அதன் உச்சியில் பட்டொளி வீசி பறக்கும் சங்கத்தின் கொடியை பறக்கவிட்டு தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவது போல தொழிலாளர்கள் அனைவரும் தொழிற் சாலைக்கு செல்லும் முன் அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று கனவு காண ஆரம் பித்திருக்கிறேன். இப்போது என்னுடைய ஒரே கனவாக அது மட்டுமே இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் (நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நிர் வாகம் என்னை அவர்கள் நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டது) மனித வளத்துறை பொது மேலாளர் அவானிஷ் தேவ் இறந்து போன அன்றைய தினத்தில் எத்தனை பதற்றத்தோடு இருந்தேன் என்பதை நீ அறிவாய்.

 எனது சொந்த சகோதரனை பறிகொடுத்தது போன்ற உணர்வில் நான் இருந்தேன்.அப்போது சங்கத் தலைவர்களாக இருந்தவர் கள் கூட அவரைப் பற்றி நல்லவிதமாகவே பேசி னார்கள். அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவான வர் என்பதால் நிர்வாகம் கூட அவர் மீது கோப மாக இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இப்போது அவருடைய பிரதேப் பரிசோதனை அறிக்கை மர்ம முடிச்சுகளால் சூழப்பட்டிருக்கிறது. அவரை அடித்து கொன்று எரித்ததாக எல்லா பத்திரிகை களும் செய்திகள் வெளியிட்டன. நானும் கூட உண்மை என்று நம்பியிருந்தேன். இப்போது காலில் சில காயங்களைத் தவிர வேறு காயங்கள் உடம்பில் இல்லை என்றும் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்து போனார் என்றும் வெளிப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளைப் பற்றி எனக்குத் தெரியும். தொழில் தகராறுக்காக அவர்கள் யாரையும் கொல்லத் துணியமாட் டார்கள். அப்படி எல்லாம் நடந்தால் இந்த நிறு வனத்தில் எத்தனையோ கொலைகள் நடந் திருக்க வேண்டும்.இந்த நல்ல மனிதரை கொல் வதற்கு நிச்சயம் தொழிலாளிகள் துணிந்திருக்க மாட்டார்கள்.

 நம் திருமணம் முடிந்து ஒரு வார காலம் முடிந்த பிறகு உனது வீட்டிற்கு விருந்திற்காக வந் திருந்தேன். உனது உறவுக்காரர்களை எல்லாம் அழைத்து வந்து உனது அப்பா பெருமை பொங்க எனது மருமகன் மாருதி சுசுகியில் வேலை செய்கிறார். அது ஒரு ஜப்பான் நிறுவனம். நல்ல சம்பளம். கவுரமான வேலை என்று குறிப்பிட்டார்.அப்போது, உங்கள் குடும்ப உறுப்பினர் களிடமும் உறவினர்களிடமும் ஒரு பெருமிதம் தொற்றிக் கொண்டதை உணர முடிந்தது. அடுத்த நாள் நான் கடைவீதிக்குச் சென்றபோது சில இளைஞர்கள் தாங்கள் மாருதி சுசுகி நிறு வனத்தில் பணிக்குச் சேர முடியுமா? என்னால் அதற்கு உதவ முடியுமா என்றெல்லாம் கேட் டார்கள்.

சில சிறார்கள் கூட, அந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமென்றால் என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் கூட கேட் டார்கள். நான் அவற்றிற்கெல்லாம் ஏதோ பதில் சொல்லிவிட்டு வந்தேன்.நிறுவனத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். 48 நிமிடத்தில் ஒரு கார் உற்பத்தியாகி வெளியே வந்துவிடும். எனவே, சில நொடி களைக் கூட விட்டுக் கொடுப்பதற்கு நிர்வாகம் அனுமதிக்காது. ஆனால் பிரீதம், ஒரு மனிதன் டீ குடிக்கக் கூட உட்கார முடியாது.ஆனால் கூட எங்கள் மேலதிகாரிகள் டீ குடிக்கிற இடத்தில் வேலை சம்பந்தமாக ஆணைகளை பிறப்பிப்பார்கள். அது ஒன்றும் புதிய விசயம் கிடையாது, எங்களுக்குப் பழகிப் போன ஒன்றுதான்.துரதிர்ஷ்டமான அந்த ஜூலை 17 ஆம் தேதி ஒரு தொழிலாளி பாவம் அவன், என்ன சிரமத்தில் இருந்தானோ அவனிடமிருந்த மனிதன் சற்று தலையைத் தூக்கி மேலதிகாரியிடம் இந்த 7 நிமிடம் டீ குடிப்பதற்கான எங்கள் நேரம். இப் போது எதுவும் சொல்லாதீர்கள் என்று கூறியிருக் கிறான். உலகம் முழுவதும் பெருமிதத்தோடு தங்கள் கார்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் சூப்பரவைசரிடம் அப்படியெல்லாம் பேசக் கூடாது என்கிற நியதி பாவம் அந்த தொழிலாளிக்கு தெரிந்திருக்க வில்லை.

அப்படி கேள்வி கேட்டதற்காக அந்த தொழிலாளியை சாதியைச் சொல்லி அந்த சூப்பிர வைசர் திட்டிவிட்டார். இது அனைத்து தொழி லாளிகளின் முன்பு நடந்து, அனைத்து தொழி லாளிகளும் அவமான உணர்வை அனுபவித் தார்கள். இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது சம்பந்தப்பட்ட சூப்பிரவைசர் மீது நட வடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவமானப்பட்ட தொழிலாளி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதை யொட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பின்பு இதுவரை நாங்கள் சிறையிலிருக்கிறோம்.ஆகஸ்ட் 1 ஆம் தேதி 2012 இல் போலீஸ் 10 பேரை கைது செய்தது. அவர்களில் சங்கத் தலைவர்களும் அடங்குவர். அவர்களை போலீஸ் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய வில்லை. போலீஸ் தேடுகிறது என்று தெரிந்ததும் அவர்களாகவே காவல்நிலையத்திற்கு போனார்கள். பிரீதம், காக்கி உடையைப் போட்ட பிறகு காவல்துறையினர் மனித குணங்களை கழற்றி வைத்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சரணடைந்த அந்த தொழிலாளிகளை காவல் துறையினர் வாயிலும் நெஞ்சிலும் பூட்ஸ் கால் களால் மிதித்ததையும், அது அவர்களின் கடமை யைப் போல செய்ததையும் என் வாழ்நாளில் அதை மறக்கமாட்டேன்.அதன் பிறகு நானும் கைது செய்யப்பட்டேன் இப்போது 147 பேரில் காசநோயால் பாதிக்கப் பட்ட ஒருவரைத் தவிர மீதி அனைவரும் சிறைக்குள் தான் இருக்கிறோம். நான் கைது செய்யப்பட்ட போது சங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்ட மற்றவர் களும் நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று கேட்டார்கள். ஏனென்றால், அவர்களுக் குத் தெரியும் நான் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவன் அல்ல. தொழிற்சங்கத் தலை வர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விமர்சித்து அவர்களுக்கு ஆதரவாக பேசியதற்காகவே நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். சிறைக்குள் வந்த பல நாட்களில் எனக்கு உறக்கமே பிடித்ததில்லை. நான் சிறைக்குள் வந்ததை விட, இதர 146 பேருடன் எந்த வகை யிலும் தொடர்பில்லாத நான் சிறையிலடைக்கப் பட்டதை அவமானமாக கருதினேன். ஆனால், பிரீதம் இப்போது இவர்களோடு இருப்பதற்காக, அவர்களின் துயரங்களில் பங்கெடுத்ததற்காக, அவர்களின் ஒருவனாக நிர்வாகமும் போலீசும் சொல்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இந்த ஒரு காரணத்திற்காகத் தான் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வார இருமுறை உறவினர்கள் சந்திப்பு என்கிற ஆடம்பரத்தை நான் அனுபவிக் கக் கூடாது என்பதற்காகவே நீ இனிமேல் என்னைப் பார்ப்பதற்கு சிறைக்கு வரவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பிரீதம், நேற்று வரை நாங்கள் சிறைக்கு வந்து 15 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இன்று வரையிலும் எங்களுக்கு பெயில் கிடைக்க வில்லை. நம் நாட்டில் சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்பதை பெருமிதத்தோடு பிரகட னப்படுத்தி நமது நாட்டின் நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது நாட்டின் தாலுகா முதல் தலைநகரம் வரை பல படிநிலை நீதிமன்றங்களிலும் தினந்தோறும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நமது நீதி வழங்கும் முறை, ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்திக் கொண்டிருக் கின்றது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள் கூட மேல்முறையீடு செய்து இடைக்காலத்தில் பெயிலில் வெளியே வரு கிறார்கள். ஆனால், 147 பேர் 15 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறைச் சாலைக்குள்ளே இருக்கிறோம்.

 அன்று ஒரு சகோதரி தன்னுடைய அண்ணனை பார்க்க வந்திருந்த போது நீதிபதி களுக்குத் தெரியாதா, 147 பேர் சேர்ந்து ஒரு மனி தனைக் கொண்டிருப்பார்களா என்றெல்லாம் கேள்வி கேட்டார். இதற்கு எனக்கு விடை தெரியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு ஓராண்டு காலம் சிறையிலடைக்கப்படுவதற்கு நமது சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு நமது அரசியல் சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. இப்போதும் கூட அதன் மீதான நம்பிக்கையை நான் முழுவதுமாக இழந்துவிடவில்லை. அரசியல் அதிகாரத்தி லிருப்போர் அவ்வப்போது சட்டம் தன் கடமை யைச் செய்யும் என்று முடங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பிரீதம், மாருதி சுசுகி தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டமட்டில் சட்டம் தன் கடமையைச் செய்திருந்தால், இந்த நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் போயிருக்கும். தொழிலாளர்கள் விசயத்தில் கடமையைச் செய்யாத சட்டம், மாருதி சுசுகி நிறுவனத்திற்காக 147 குடும்பங் களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக் கிறது. இது அவானிஷ் தேவ் இன் கொலைக்காக இத்தனை கடுமையாக நடந்து கொள்வதாக நான் நினைக்கவில்லை.

மாருதி சுசுகி நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கான சட்டப்படியான உரிமை யைக் கோரியதற்காகவும் சங்கம் வைக்க முயற் சித்ததற்காகவும் கொடுக்கப்பட்ட தண்டனை. இந்தியாவில் செயல்படும் எந்த ஒரு பன் னாட்டு நிறுவனத்திடமும் தொழிற்சங்கம் வைப்ப தற்கு எவனும் துணியக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை. இந்தியாவில் இருக்கக் கூடிய அந்நிய தூதரங்கள் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி செயல்படும். ஆனால், இந்தியாவில் செயல் படும் எந்த நாட்டு நிறுவனமும் எந்த நாட்டு சட்டங்களையும் மதிக்காது.நம்முடைய அரசியல் சட்டம் முடமாக்கப் பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் வீடு, மனைவி, மக்கள், சுகம், செல்வம் அனைத் தையும் இழந்து நம் முன்னோர்கள் பெற்ற சுதந் திரம், அந்நிய நிறுவனங்களிடம் செயலற்று நிற் பதைப் பார்க்கிற போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அந்த பிரகடனம் கண் கள் பிடுங்கப்பட்டு, செவிப்பறைகள் கிழிக்கப் பட்டு, குரல்வளை நெறிக்கப்பட்டு, தேகம் எங்கும் குருதி வழிய குற்றுயிராய் கிடப்பதை நான் உணர்கிறேன்.பிரீதம், இப்போது என் மனதில் ஒரே ஒரு நோக்கத்தைத்தான் பிரதானமாக வைத்திருக் கிறேன். நேற்று உனக்குப் பின்பு வேறொருவரை பார்க்க வந்திருந்த ஒருத்தர் சொன்னார், மாருதி சுசுகி நிறுவனத்தின் வாயில் முன்பாக பறந்து கொண்டிருக்கும் சங்கத்தின் கொடி அழுக் கடைந்து, கந்தலாகி படபடத்துக் கொண்டிருப்ப தாகக் கூறினார். அதை சொல்கிறபோது நாடாளு மன்றமும் சட்டமன்றங்களும் நீதிமன்றங்களும் குற்றுயிரும் குலையிருமாய் துடித்துக் கொண் டிருக்கும் ஒரு மனிதனை ஏதோ ஒரு விசுவாசத் தால் ஏதோ ஒரு பயத்தால் ஏதோ ஒரு நிர்ப்பந்தத் தால் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.ஒரு சங்கம் வைக்க முயற்சித்ததற்காக நாங்கள் 146 பேர் சிறையிலிருப்பது மட்டுமல்ல, 3200 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
 இவர்களில் நிரந்தரத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி, அப்ரண்டிஸ் என எல்லா தொழி லாளிகளும் அடக்கம். இவர்களுடைய எல்லா குடும்பங்களும் தெருவில் தான் நின்று கொண் டிருக்கின்றன. இவர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறதாம். 

ஒருவேளை நாங்கள் 147 பேரும் கொலைக் குற்றத்திற்காக உள்ளே இருக் கிறோம் என்றால் இந்த 3200 பேரும் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள். தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்ததற்காக. எனவே, இது அவானிஷ் தேவ் கொல்லப்பட்டதற்கான தண்ட னை அல்ல. தொழிற்சங்கம் அமைக்க முற்பட்ட தற்கான எச்சரிக்கை.பிரீதம், எனக்கு ஒரு கனவிருக்கிறது. நான் வெளியே வருவேன். நாடாளுமன்றத்தாலும், சட்டமன்றத்தாலும் நீதிமன்றங்களாலும் கை விடப்பட்ட அழுக்கடைந்து கிழிந்து படபடத்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்வேன். தேசியக் கொடியை வணங்குவதுபோல் தொழிலாளிகள் தங்கள் சங்கக் கொடியை பெருமிதத்தோடு வணங்கச் செய்வதற்கான பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.பிரீதம், கிழித்தெறியப்பட்டு, கீழே கண் டெடுக்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் அந்தப் பக்கத்தை பத்திரமாக வைக்கிறேன். அதை, அதன் ஆன்மாவை பாதுகாக்கும் முயற்சி யில் இதர தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நான் போராட வருவேன். முன்பிருந் தது போன்ற குருட்டுத் தனமான பக்தியின் அடிப் படையில் அல்ல. ஒரு அரசியல் சட்டம் தன் நாட் டின் அத்தனைக் குடிமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற உண்மையான அர்த்தத்தில்.என்னைப் போன்று கணவனையோ, மகனையோ, தந்தையையோ, சிறையில் கடந்த ஓராண்டு காலமாக பார்த்துக் கொண்டிருக்கிற எல்லோருக்கும் சொல், நிச்சயமாக ஒரு நாள் நமது நியாயங்களை நமது அரசியல் சட்டம் உத் தரவாதப்படுத்தும். ஒருவேளை அது இயலாமல் போனால், புதியதொரு அரசியல் சட்டத்தை இந்தியாவின் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற சட்டத்தை நாம் உருவாக்குவோம்.

பிரீதம், இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் பாக மிகப்பெரும் சுமைகளை உனக்கு விட்டு வந்திருப்பதற்காக நான் வருந்துகிறேன். நான் சிறைக்கு வந்த பிறகு அம்மாவுக்கும் உனக்கு மான பிணக்குகள் கூட தீர்ந்திருப்பதாக அம்மா கூறினார். அவர்களை தன் மகளைப் போல பார்த்துக் கொள்வதாக அம்மா குறிப்பிட்டார். உன் தாய், தந்தையர் உனக்கு உதவ முயற்சித்த போது அதை மறுத்துவிட்டதாகவும் அம்மா என்னிடம் சொன்னார். நீ பக்குவப்பட்டிருப்பதையும் தைரியம் அடைந்திருப்பதையும் நான் உணர்கிறேன். சிறை யிலிருக்கும் 146 பேரையும் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் பல தொழிற்சங்கங் கள் போராடிக் கொண்டிருக் கின்றன. அவர்களது முயற்சியில் உன்னையும் இணைத்துக் கொள். வாரா வாராம் என்னைப் பார்ப்பதை விட வாரத் தில் ஒரு நாளாவாது அந்த முயற்சியில் பங்கெடுப் பதையே நான் பெருமை யாகக் கருதுகிறேன்.அன்புடன்- ஜிதேந்தர்
தமிழில் : க.கனகராஜ்

நன்றி-தீக்கதிர் 11.11.2013

மகளிர் பயிலரங்கம்ஒத்திவைப்பு

அன்பார்ந்த தோழர்களே!
17.11.2013 கோவையில் நடைபெற இருந்த மகளிர் பயிலரங்கம் எதிர்வரும் 8.12.2013அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எழுச்சியோடு நடைபெற்ற மதுரை மாவட்டமாநாடு

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click HERE

சனி, 9 நவம்பர், 2013

கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் மன்மோகன் அரசு

25 லட்சம் டன் டீசல் பேரம் : ரிலையன்சுக்கு அரசு சலுகை



புதுதில்லி, நவ. 8-
இந்திய ரயில்வேக்கு டீசல் சப்ளை செய்யும் மிகப்பெரும் ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறு வனங்களிடமிருந்து எப்படியேனும் கைப்பற்றுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனமும் எஸ்ஸார் நிறுவனமும் முயற்சி மேற்கொண்டுள்ளன.
மேற்கண்ட தனியார் பெரும் நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் விதத்தில் மன்மோகன் சிங் அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கை அமைந்திருப்பதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வருடத்திற்கு 25 லட்சம் டன் அளவிற்கு ரயில்வே துறைக்கு டீசல் சப்ளை செய்யும் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான எரிபொருள் கொள்கையை அமலாக்கி வரு கிறது.
முற்றிலும் தனியார் பெரும் நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையிலேயே மன் மோகன் அரசின் எரிபொருள் விலை நிர்ணயக்கொள்கை அமைந்துள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசு கைவிட்டதைப் போலவே இந்த ஆண்டின் துவக்கத்தில் டீசல்விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தையும் அரசு கைவிட்டது.
எண்ணெய் நிறுவனங்களே இஷ்டம்போல் டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் அதிகாரத்தை வழங்கியது. இதன் விளைவாக 15 நாட்களுக்கு ஒருமுறை டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இது நாட்டு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், டீசல் விலை நிர்ணயத்தில் சமீபத்தில் இரட்டைக்கொள்கையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
அதன்படி சில்லரைவிற்பனையைவிட, மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யும் அரசுப்போக்குவரத்து நிறுவனங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக நாடு முழுவதும் மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்தும் தனியார் பெட்ரோல் பங்க்குகளில் சில்லரைக்கு டீசல் நிரப்பும் மோசமான சூழ் நிலைமைக்கு தள்ளப்பட்டன. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் இருக்கின்றன.
ரயில்வே : இந்நிலையில், ரயில்வேயில் டீசல் கொள்முதல் செய்வதிலும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இந்திய ரயில்வே துறைதான் நாட்டிலேயே பெரும் அளவில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து டீசல் கொள்முதல் செய்யும் நிறுவனம் ஆகும். ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 லட்சம் டன் அளவிற்கு இந்திய ரயில்வே துறை டீசல் கொள்முதல் செய்தது.
இதுவரையிலும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய முப்பெரும் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களே ரயில்வே துறைக்கு டீசல் சப்ளை செய்து வருகின்றன. இந்நிலையில், ரயில்வே துறைக்கு மானிய விலையில் மொத்தமாக டீசலை வழங்க முடியாது என்று இந்நிறுவனங்களும் கைவிரித்துள்ளன.
வழக்கமாக ரயில்வேக்கு மொத்தமாக டீசலை சப்ளை செய்துவிட்டு அதற்கான மானியத் தொகையை அரசாங்கத்திடமிருந்து பின்னர் மேற்கண்ட பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த நடைமுறையை மன்மோகன் அரசு ஒழித்துக்கட்டுவது என்று முடிவு செய்துவிட்டது.
இதன் விளைவாக ரயில்வேக்கு கிலோ லிட்டர் ஒன்றுக்கு ரூ.525 தள்ளுபடி செய்து சலுகை விலையில் டீசல் சப்ளை செய்து கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது மொத்த கொள்முதல் விலையான லிட்டர் ஒன்றுக்கு ரூ.63 என்று கூடுதல் விலையிலேயே சப்ளை செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
இது, ஏற்கெனவே மானிய விலையில் ரயில்வேத்துறை பெற்றுக்கொண்டிருந்த விலையைவிட சுமார் ரூ.9 முதல் ரூ.10 வரை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வேயில் பயன்படுத்தப்படுகிற அதிவேக டீசலை சப்ளை செய்து வரும் பொதுத்துறை நிறுவனங்கள் இனி சலுகை விலையில் சப்ளை செய்ய முடியாது என்று கூறியிருப்பதைத் தொடர்ந்து ரயில்வே துறை பொதுத்துறை நிறுவனங்களைவிட குறைந்தபட்ச அளவேனும் சலுகை விலையில் அதிவேக டீசல் சப்ளை செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்களை நாடுவதற்கு முடிவெடுத்துள்ளது.
இதை அறிந்துகொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளிட்ட தனியார் பெட்ரோலியக் கம்பெனிகள் ரயில்வே துறைக்கு டீசல் சப்ளை செய்யும் மிகப்பெரும் ஒப்பந்தத்தை கைப்பற்றுவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளன. ஆண்டு ஒன்றுக்கு 25 லட்சம் டன் அளவிற்கு நடைபெற வாய்ப்புள்ள டீசல் வியாபாரத்தை எந்த விதத்திலும் இழப்பதற்கு தயாராக இல்லாத முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், நாட்டில் 11 மண்டலங்களில் ரயில்வேக்கு டீசல் சப்ளை செய்ய அனுமதி கேட்டு முயற்சி மேற்கொண்டுள்ளது.
எஸ்ஸார் நிறுவனம் குஜராத்தில் ஒரு மண்டலத்தில் ஒப்பந்தத்தைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. சலுகை விலையில் டீசல் கொள்முதல் செய்வதற்கான ரயில்வேயின் அடுத்த ஆண்டிற்கான டெண்டர் கடந்த புதன்கிழமை துவங்கியுள்ள நிலையில், பொதுத்துறை நிறுவனங்களைவிட கூடுதலாக விலை தள்ளுபடி செய்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் உண்மையில் பொதுத்துறை நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.63 விலை நிர்ணயம் செய்துள்ள சூழலில் ரிலையன்ஸ் உள்ளிட்டதனியார் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு வெறும் 1 ரூபாய் மட்டும் குறைத்து ரூ.62 என டெண்டரில் தந்திரமாக குறிப்பிட்டு இந்த மாபெரும் டீசல் ஒப்பந்தத்தை கைப்பற்றுவது என முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
வெறும் ஒரு ரூபாய் வித்தியாசத்தில் 25 லட்சம் டன் டீசல் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இழக்கும் ஆபத்து எழுந்துள்ளது. எனினும் அதைத் தடுத்து நிறுத்த பெட்ரோலிய அமைச்சகமோ, மன்மோகன் அரசோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை......நன்றி தீக்கதிர் 

வெள்ளி, 8 நவம்பர், 2013

வாழ்த்துகிறோம்

மதுரை மாவட்டசங்கதின் 7-வது மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் 8,9 நவம்பரில் நடைபெற உள்ளது.இம்மாநாடு வெற்றிபெற,சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் மனமார வாழ்த்துகிறோம்.

வியாழன், 7 நவம்பர், 2013

நவம்பர் - 7 புரட்சி தின நல் வாழ்த்துக்கள் . . .

உலகைக் குலுக்கிய நவம்பர் புரட்சி நடந்தேறிய நாள் இன்று. உலகில் முதன் முதலாய் மனிதனை மனிதன் சுரண்டாத சோசலிச அமைப்பை அமைப்பதற்கு கால்கோள் நடத்திய நாள் இன்று.
இரண்டாம் உலகப்போரின்போது இரண்டு கோடி மக்களை களப்பலி ஆக்கி பாசிச பேரபாயத்திலிருந்து பூவுலகை காத்தது சோவியத் யூனியன். இன்றைக்கு இந்தியாவில் மதவெறி பாசிச சக்திகள் தலையெடுக்க முயல்கின்றன. பாசிச சக்திகளை முற்றாக முறியடித்து, எல்லோரும் எல்லாமும் பெறுகிற சோசலிச சமுதாயத்தை அமைத்திட இந்நாளில் சூளுரைப்போம்கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாகவே நவம்பர் புரட்சி திகழ்கிறது. சோவியத் பின்னடைவு ஏற்பட்டு இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இன்றைய உலக நிகழ்வுக்ள் அதை உண்மை என்று நிரூபித்து வருகின்றன. முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அதிலிருந்து மீள உலகத்திலுள்ள உழைப்பாளிமக்களின் மீது தனது சுமையை சுமத்த முதலாளித்துவம் முயற்சி செய்வதும் அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்து கிளம்புவதும் சோசலிசமே நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மாமருந்து
அந்தந்த நாடுகளில் நிலவி வரும் அரசியல் நிலையற்ற நிலைமைகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு ஆதாயம் தேட ஏகாதிபத்தியம் முயல்கிறது. இதனுடைய ஒரு பகுதி தான் இந்தியாவில், தற்போது மன்மோகன் சிங் அரசு மேற்கொண்டுவரும் பொருளாதார சீர்திருத்தங்கள் என்றபெயரில் மக்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில் இன்று மத்திய அரசு இந்திய நாடாளுமன்ற ஜனநாயத்திற்கே வேட்டு வைக்கிறது. அமைச்சரவை கூட்டங்களிலேயே  இன்று  சாதாரண  இந்தியனின்  தலைவிதி  நிர்ணயிக்கப்படுகிறது.
உலகமயம், தாராளமயம், தனியார் மயம் போன்ற கொள்கைகளை அமல் படுத்துவதின் காரணமாகவே இன்று மைய அரசிலும் பெரும்பான்மையான மாநில அரசுகளிலும், தலைவிரித்தாடும் லஞ்சமும், ஊழலும். மக்களிடையே தலைவிரித்தாடும் வறுமைப் பசியும் ஆகும். தற்கொலை, வேலையின்மை, பாலின சுரண்டல் உள்ளிட்ட பல கொடிய உயிர்க்கொல்லி நோய்களை இது உருவாக்கியுள்ளது.இதற்கு மருந்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை விரிவாக்கி போராட்டங்களை ஒருங்கிணைத்து, சோசலிச சக்திகளை வலுப்பெறச் செய்து அரசியல் அதிகாரம் பெற வைப்பதுமே ஆகும். இந்த சமூக மா மருந்து உருவாகுமிடம் தொழிற்சங்க கூடங்களே! இதை உருவாக்கும் மருத்துவர்கள் தொழிலாளர்களே! சீரிய இப்பணியினை செய்து முடிக்க நவம்பர் புரட்சி வகுத்துக் கொடுத்த பாதையில் முன்னேறுவோம். 
.....நன்றி தீக்கதிர்