வியாழன், 12 செப்டம்பர், 2013

பண்ருட்டியில் பொதுக்குழு

நமது மாவட்ட செயலக முடிவின்படி இன்று(12.09.2013) மதிய உணவு இடைவேளையில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. தோழியர் G.இராஜேஸ்வரி தலைமை ஏற்றார்.தோழர்P.ராஜேந்திரன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பொதுக்குழுவின் நோக்கங்களை முன்வைத்தார். மாவட்ட செயலர் தோழர்K.T.சம்பந்தம்  6-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய சூழல்களையும் ,நமது மத்திய,மாநில சங்கங்கள் மேற்கொண்டுள்ள  தொடர்முயற்சிகளையும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் நமது மாவட்டத்தில் நமது செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும்,எதிர்வரும் 27.09.2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளையும் வேலைநிறுத்தத்தின் அவசியத்தையும் விளக்கமாகப் பேசினார். பண்ருட்டி கிளைத்தோழர்கள் அனைத்து நன்கொடைகளையும்  செலுத்தியதற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். இறுதியாக தோழர் K.மணிமாறன் நன்றிநவில பொதுக்குழுக்கூட்டம் நிறைவுற்றது.

 

கருத்துகள் இல்லை: