செவ்வாய், 17 மார்ச், 2015

நிலைக்குழு மற்றும் PLI கமிட்டி முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
12.௦3.2௦15 அன்று நடைபெற்ற நிலைக்குழு மற்றும் PLI கமிட்டிகூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>

வெள்ளி, 13 மார்ச், 2015

பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் ஏப். 21, 22ல் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது

சென்னை, மார்ச் 12-
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ பாதுகாத்திடவும் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்கு வங்கிகளில் கடன் வாங்க அரசே உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் சுமார் இரண்டரை லட்சம் பேர் ஏப்ரல் மாதம் 21, 22 தேதிகளில் நாடு தழுவியஅளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இதுகுறித்து சென்னையில் வியாழனன்று (மார்ச் 12) செய்தியாளர்களிடம் பேசிய பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டார ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.செல்லப்பா, தலைவர் ஆர்.பட்டாபிராமன் ஆகியோர் கூறியது வருமாறு :
மக்களின் சொத்தான பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்ட பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதிதேவைப்படுகிறது. உரிய சாதனங்கள் இல்லாமல் சிறந்த சேவையை வழங்கமுடியாது. இந்த சேவையை அளிக்க அதிக கோபுரங்கள் தேவை. இதற்கு பணம் தேவை. ஆனால் பிஎஸ்என்எல் விரிவாக்கத்திட்டத்திற்கு போதிய பணம் இல்லை.
காரணம் என்னவென்றால் 2009ல் இருந்து நிறுவனம் நட்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் 2004ல் பிஎஸ்என்எல் ரூ.10ஆயிரம் கோடி லாபம் ஈட்டியது. இதற்கு முன்பு இருந்த மன்மோகன்சிங் அரசாங்கமும் தற்போதுள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கமும் தனியார்மய, தாராளமய பொருளாதார கொள்கைகளை மிகவேகமாக அமலாக்கி தனியார் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு சதி
உதாரணத்திற்கு விரிவாக்கம் செய்வதற்கு வங்கியில் பிஎஸ்என்எல் கடன் கேட்டால் தரமறுக்கிறார்கள். காரணம் அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் உத்தரவாதம் அளிக்க மத்திய அரசு தயாராக இல்லை. இதனால் பிஎஸ்என்எல் சேவையை விரிவாக்கம் செய்யமுடியவில்லை. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வங்கிகளில் கடன் வாங்கி 2லட்சம் கோடி ரூபாய் வரை பணம் வைத்திருக்கின்றன. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒரு நட்டமடைந்த நிறுவனமாக மாற்றி அதை மூடிவிடுவது என்பது தான் அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.
ஆனால் ஊழியர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய சங்கங்கள் அனைத்தும் இந்நிறுவனத்தை லாபகரமாக நடத்த தொடர்ந்து போராடி வருகின்றன.
தேசப்பாதுகாப்பு தனியாருக்கு பொருந்தாதா?
2007 ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4கோடியே 50லட்சம் புதிய செல்போன்சேவைக்கான இணைப்புகளை வழங்குவதற்குதேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு விடப்படவிருந்த டெண்டர் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்ற அதிகாரிகளும் ஊழியர்களும் 2007 ஆம்ஆண்டு ஜூலை மாதம் 11ஆம்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர்.
அதன் பின்னர்நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 2கோடியே 25லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. 2010ல் பிஎஸ்என்எல் நிறுவனம் கோரிய 9கோடியே 30லட்சம் இணைப்புகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டது.
சீனாவை சேர்ந்த ஹவாய் நிறுவனத்திடமிருந்து உபகரணங்கள் வாங்கினால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் தலைமை தணிக்கை அதிகாரியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதே நிறுவனத்திடமிருந்து இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடுக்கவில்லை. தேசப்பாதுகாப்பு என்றால் தனியாருக்கு பொருந்தாதா?ஏற்கனவே எங்களது 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபமாக நடத்தமுடியும் என்ற யோசனைகளை தெரிவித்தும் 25 லட்சம் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களை பிரதமரிடம் கடந்த மாதம் 25 ஆம் தேதி அளித்தோம். அதற்கு பிறகும் பிரதமர் மோடியோ அல்லது தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத்தோ எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து நட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவேதான் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் உடனடியாக அரசு இந்தப்பிரச்சனையில் தலையிடவேண்டும் என வலியுறுத்தியும் ஏப்ரல் மாதம் 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதில் இந்தியா முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் ஊழியர்களும் அதிகாரிகளும் 100 விழுக்காடு பங்கேற்பார்கள். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள். எனவே மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்தை நடத்தி தீர்வு காணமுன்வரவேண்டும். இதன் பின்னரும் அரசு செவிசாய்க்கமறுத்ததால் தொடர்போராட்டமாக மாறும். பிஎஸ்என்எல் சொத்து இந்திய மக்களின் சொத்து. அதை காப்பது நாம் அனைவரது கடமையாகும்.
நன்றி தீக்கதிர் 13.௦3.2௦15

12-3-2015 அன்று FORUM சார்பில் நெய்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டம்



வியாழன், 12 மார்ச், 2015

12-3-2015 அன்று FORUM சார்பில் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்



தோழர் கலைமணி பணி நிறைவு பாராட்டு விழா


பாலையாகும் நெய்தல் நிலம்?



கடற்கரையோர மாற்றமும் அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளும் வெறும் `தேச வளர்ச்சி’ என்ற ஒற்றைச் சொல்லாடல் மூலம் புறம்தள்ளிச் செல்பவை அல்ல. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நிறுவனங்கள் மக்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தங்களது மூலதனப் பெருக்கத்தை மட்டுமே குறி வைத்து அலைகின்றன, உழைப்பாளி வர்க்கத்திற்காக நிற்பவர்களுக்கு இது மிகப்பெரிய சவால்.
 
13 மாவட்டங்களை உள்ளடக்கி 1076 கிலோமீட்டரில் 551 கிராமங்களில் வசிக்கும் சுமார் எட்டு லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது தமிழகத்தின் நெய்தல் பகுதியான கடற்கரை. சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கடற்கரையோர மக்களை வாரி சுருட்டி எறிந்த சுனாமிக்கு முன்புவரை தமிழகத்தின் சமவெளி மனிதர்களுக்கும் கடற்கரை யோர சமூகத்திற்குமான உறவு என்பது சந்தையில் மீன் பேரம் பேசுவதைத் தவிர அதிகம் இருந்தது கிடையாது.சுனாமிதான் அம்மக்களின் துயரை வெளி உலகிற்கு கொண்டு வந்தது. ஆனால் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்த சுனாமி கடற்கரையை ஒரு தங்கச் சுரங்கமாய் அடையாளப் படுத்தியது.

மூலதனக்குவிப்பு
உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் மறுவாழ்வு பணிகளை விட்டுவிட்டு அதை அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகளைமட்டுமே தமிழக அரசு மேற்கொண்டது. எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் வந்தன. உண்மையில் மக்களுக்காக சில அமைப்புகள் பணியாற்றவும் செய்தன. அதன் பிறகான ஆண்டுகளில் கடற்கரையில் கடுமையான மாற்றங்கள் துவங்கின.பலவகையான கணக்கெடுப்புகள் நடந்தன. சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஏராளமான படகுகள் குவிக்கப்பட்டன. படகுகள் அதிகமானதால் போட்டிகள் அதிகமாயின. விசைப்படகுகளின் விசை அதிகரிக்கப்பட்டது. சாதாரண வலைகளைப் பயன்படுத்திய கிராமங் களில் எல்லாம் இரட்டைமடி வலையும், சுருக்கு வலையும் சகஜமானது. கரை யோரம் கட்டுமரங்களில் சென்று மீன் பிடித்தவர்களின் நிலை மோசமானது. உள்ளூர்ச் சந்தைகளுக்கான மீன் பிடிப்பு சர்வதேசச் சந்தையை நோக்கி திருப்பப்பட்டது.

பெரும் மூலதனம் மீன்பிடித் தொழிலில் இறங்கியது.மற்றொரு பக்கம் பேரிடரை முன்வைத்து புதிய வகையான மூலதனக் குவிப்பு கடற்கரையை நோக்கிவரத் துவங்கியது. பல்வகை தொழிற்சாலைகள், அனல் மின்நிலையங்கள், எண்ணெய்ச் சுத்திகரிப்பு மண்டலங்கள், நிறுவனங் களுக்கான சிறிய துறைமுகங்கள், ஜவுளிப் பூங்காக்கள், கப்பல் கட்டும் நிறுவனங்கள் என படையெடுக்கத் துவங் கின. உதாரணமாக கடலூர் ஓ.டி முதல்பரங்கிப்பேட்டை வரையிலான 30கி.மீ. தூரத்தில் மட்டும் சுமார் 8000 ஏக்கர்நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இப்படியான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே `சிப்காட்’ ரசாயன வளாகங்களால் இந்தியாவின் அபாயமான கடற்கரையாக அறியப்பட்ட கடலூரின் நிலை மேலும் மோசமானது.

அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத் தில் சீர்காழி, தரங்கம்பாடி, கீழையூர் ஆகிய வட்டங்களில் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 12 அனல்மின்நிலையங்களுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 16 அனல் மின்நிலையங்களுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆக இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்னும் சில ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடல் உள்ளது.

ஆக்கிரமிப்புகள்... மீறல்கள்... அழித்தல்கள்...
தமிழகத்தில் இத்தனை அனல்மின் நிலையங்கள் துவக்கப்பட்டால் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கிவிடும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் எந்த ஒரு நிறுவனமும் தமிழகஅரசுடன் இதற்கான ஒப்பந்தம் போட்டதாகத் தெரியவில்லை. புதிய தொழிற் சாலைகள் ஒரு பகுதிக்குச் செல்லும் போது ஆட்சியாளர்கள் வைக்கும் முழக்கம் “நாட்டின் வளர்ச்சிக்கு இது அவ சியம்” என்பதுதான்.இந்த வளர்ச்சி என்றமுழக்கம் பலரை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது. இது யாருக்கான வளர்ச்சிஎன்ற கேள்வி எங்கும் எழுப்பப்படு வதில்லை. உலகமய அமலாக்கத்தின் முன் அனுபவங்களைப் பார்க்காமல் வளர்ச்சி வரும் என்ற வார்த்தைகளை நம்புகின்றனர். தொழில்மயம் வேலை வாய்ப்பை பெருக்கும் என்பது உலகமயச் சூழலில் பகல் கனவாய் மாறியதுதான் கடந்த இரு பத்தாண்டு கால அனுபவம். மிகப்பெரும் நிறுவனங்களை துவங் கும் போது அவர்கள் சொல்லும் உறுதி மொழிகள் கட்டமைப்புப் பணிகள் முடிந்ததும் வெற்று வாக்குறுதிகளாகவே இருந்து விடுவதுதான் வேதனை.

மற்றொரு பக்கம் இப்படி கடற்கரை சார்ந்து வரும் தொழிற்சாலைகள் செய்யும் சட்ட மீறல்களும், புதிய அரசியல் புரோக் கர்களை வைத்து செய்யும் அடாவடிகளும் வெளி உலகிற்குத் தெரிவதில்லை. நிறு வனங்களுக்கு இடைத்தரகர்களாக இருக்கும் இவர்கள் மக்களைப் பிரித் தாள மிக இயல்பாக சாதி, வட்டார வெறியைக் கிளப்பி விடுகின்றனர். நிறுவனங் களில் கிடைக்கும் ஒப்பந்தத் தொழிலுக் காக நில உடமையாளர்களை இந்த தரகர்கள் கட்டாயப்படுத்தி நிலம் அப கரித்த கதைகள் ஒரு நூறு இருக்கிறது.பரங்கிப்பேட்டை பகுதியில் இரவு 12 மணி வரை பத்திரப் பதிவு அலுவல கங்கள் செயல்பட்டது ஒரு சிறிய உதாரணம். மக்கள் பயன்பாட்டில் உள்ள தரிசுநிலங்கள், சுடுகாடுகள், பள்ளி விளை யாட்டு மைதானங்கள், மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடித் தளங்கள் கைப்பற்றப்பட்டன. சுனாமியிலிருந்து இயற்கையாய் மக்களை பாதுகாத்த மணல் குன்றுகள் சமப்படுத்தப்பட்டன. வரலாற்றுப் புகழ்மிக்க கால்வாய்கள் சீரழிக்கப்பட்டன.

பொய்யான ஆய்வுகள்... கசப்பான உண்மைகள்
கடற்கரையோரம் வருகின்ற பல்வேறு நிறுவனங்கள் அங்கு உள்ள நிலைமையை முழுமையாக ஆய்வு செய்வ தில்லை, அப்படியே செய்தாலும் உண்மை நிலையைச் சொல்வதில்லை. பல்வேறு நிறுவனங்கள் தங்களது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் பொய்யான தகவல்களையே சொல்லி உள்ளனர். உதாரணமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பணிகளை மேற்கொண்டுள்ள ஐ.எல்.எப்.எஸ் என்றஅனல்மின் நிலையம் தனது அறிக்கை யில் மாங்குரோவ் காடுகள் உள்ள பிச்சாவரத்தை 12 கி.மீ. தூரத்திற்கு அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளது. 6 கி.மீ.க்குள்தான் மாங்குரோவ் காடுகள்உள்ளன. அதே போல வேளங்கி ராயன்பேட்டை கிராமத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றுபொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட் டம் நடத்திய குட் எர்த் ஷிப் யார்டு என்றநிறுவனம் மறைமுகமாக பாஸ் பேட் இரசாயன நிறுவனத்தை கொண்டு வருவது கண்டறியப்பட்டு சி.பி,எம் சட்ட மன்ற உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டது. நிறுவனங்கள் அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும், இத்தனை ஆயிரம்பேருக்கு நேரடி, மறைமுக வேலைகள்கிடைக்கும் என தங்களது அறிக்கை களில் நிறுவனங்கள் கூறும். ஆனால் உண்மை மிகவும் கசப்பானது. நாகைமாவட்டம் பிள்ளைபெருமாள் பேட்டை யில் நிலம் கையகப்படுத்தும் போது உள் ளூர் மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் தற்போது அங்கு விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளூர் மக்கள் வேலை செய்கின்றனர். கட்டுமானப் பணிகளில் உள்ளூர் அல்லது தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் படுவதில்லை.

வடமாநில இளைஞர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். திறன்மிக்க தொழிலாளர்கள் தேவை என்று அவர்கள் கூறினாலும் அதில் முழுமையான உண்மை இல்லை. குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்ட அவர்களை கொத் தடிமைகளாய் கொண்டு வருகின்றனர். அப்பணிகளை உள்ளூர் இளைஞர்கள் செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு அதிகக் கூலி கொடுக்கவேண்டும் என்பதும், சங்கம் அமைப்பார்கள் என்பதும்தான் புறக்கணிப்புக்கான அடிப்படைக் காரணமாகும்.

மிரட்டலும் அகற்றுதலும் அப்புறப்படுத்தலும்
மீனவர்களின் வாழ்க்கை மோசமான தாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பாரம்பரியமாக படகுகளை நிறுத்தும் இடங்கள், வலைகளை காயவைத்த இடங்கள், கடல் புறம்போக்கு நிலங்கள் எல்லாம் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாகார்ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் கடற்கரையில் நீளமாக வேலி அமைத்து அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக்கூடாது என மீனவ மக்களை எச்சரிக்கிறது. கடற்கரை சார்ந்த பல்வேறு சட்டங்களை மீறி கடற்கரையில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. கடலூரில் சிப்காட் வளாகத்தின் ரசாயனக் கழிவுகள் பர வனாற்றின் வழியாகவும், நேரடியாகவும் கடலில் கலக்கப்படு கிறது. மீன்பிடியைத் தவிர வேறு தொழில்களை இச்சமூகம் இன்னும் பழகவில்லை. அவர்கள் வெளியேற்றப்படுவது இன்னும் சில ஆண்டு களில் நடக்க அதிகம் சாத்தியம் உள்ளது. இது அந்த சமூகத்தில் கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.

கடற்கரையோரவாழ்க்கைச் சூழல் பாதிப்பு
கடற்கரை சார்ந்த மீனவர்களின் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. கடற்கரையோரம் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் அதை நம்பிவாழ்ந்த விவசாயிகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக் குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பெண் கள் படும் துயரைச் சொல்லவும் வழி இல்லாமல் தவிக்கின்றனர். காடுகள் அழிக்கப்பட்டு சமவெளியாக மாற்றப்படுவதால் அவர்களது வாழ்க்கைச் சூழல் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது.

உள்ளூரில் அவர் களுக்கு கிடைத்த வேலைகள் முற் றிலும் நிறுத்தப்பட்டன. வேலைக்காக அருகில் உள்ள நகரங்களுக்கோ அல்லது பிற கிராமப் பகுதிகளுக்கோ செல்ல நிர்ப்பந் திக்கப்படுகின்றனர். மிக எளிதாக கிடைத்த உணவுக்கான பொருட்கள், விறகுகள் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திடீரென அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களை நிலைகுலையச் செய்துள்ளன.

கடற்கரையோர மாற்றமும் அங்கு எழுந்துள்ள பிரச்சனைகளும் வெறும் “தேச வளர்ச்சி” என்ற ஒற்றைச் சொல் லாடல் மூலம் புறம்தள்ளிச் செல்பவை அல்ல. மக்களின் வாழ்வாதாரம் கேள் விக்குள்ளாக்கியுள்ளது. நிறுவனங்கள் மக்கள் வாழ்வாதாரத்தை பற்றி கொஞ்ச மும் கவலைப்படாமல், தங்களது மூலதனப் பெருக்கத்தை மட்டுமே குறி வைத்து அலைகின்றன, உழைப்பாளி வர்க்கத்திற்காக நிற்பவர்களுக்கு இது மிகப் பெரிய சவால்.இந்நிலையில் மக்கள் போராட்டங்கள் மட்டுமே வாழ்வாதாரத்திற்கு குறைந்த பட்ச பாதுகாப்பை உருவாக்கும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராடி, பல வழக்குகளை சந்தித்து தற்போதுதான் உள்ளூர் மக்களுக்கு பரங்கிப் பேட்டை அனல்மின் நிலையத்தில் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது,

சுற்றி உள்ள கிராம மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், கழிப் பிட வசதிகள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கிராமங்களில் சீரழிந்த சாலைகளை புதிதாகப் போடுவது போன்ற ஒப்பந்தத்தின் மூலம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முதல் கட்ட ஒப்பந்தத்தை எட்டிஉள்ளது. தமிழகம் முழுவதும் கடற்கரை யோர மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத் திட ஒன்றுபட்ட போராட்டமே தீர்வாகும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் செய்தி.போராட்டம் தொடர்கிறது. 1076 கிலோமீட் டரை ஒருங் கிணைக்கும் போராட்டமாக இதை விரிவாக்க வேண்டும்.
---- தோழர் S.G.ரமேஷ்பாபு, தீக்கதிர் 12.03.2015

மாநிலச்சங்க சுற்றறிக்கை எண்:29

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
கோவையில் 11.௦3.2௦15 அன்று நடைபெற்ற  தமிழ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>

மாநிலச்சங்க சுற்றறிக்கை எண்:28

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
சில மத்திய சங்க செய்திகளும் CMDஉடன் சந்திப்பும்  அதுபற்றிய விபரங்களை உள்ளடக்கிய நமது மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>

புதன், 11 மார்ச், 2015

மாநிலச்சங்க சுற்றறிக்கை எண்:27

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
தற்போதைய அண்மைச்செய்திகள் குறித்த நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

மாநிலச்சங்க சுற்றறிக்கை எண்:26

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
 ஓய்வு பெறும் தோழர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் குறித்த காலத்தில் கிடைத்திட கார்ப்பரேட் அலுவலகத்தின் வழிகாட்டுதல்களும், இன்னம் பிற செய்திகளும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

மத்திய சங்க சுற்றறிக்கை எண் 4ன் தமிழாக்கம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
நமது மத்திய சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ளது.அதனைப் படிக்க <<<Read>>>

12.03.2015 அன்று அனைத்து கிளைகளிலும் கண்டன முழக்கம் செய்திடுவீர் !

சனி, 7 மார்ச், 2015

அம்பானியை பின்னுக்கு தள்ளிய புதிய பணமுதலை


நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக `சன் பார்மா’ மருந்து கம்பெனி அதிபர் திலீப் சாங்வி அவதாரம் எடுத்துள்ளார். முகேஷ் அம்பானியை அவர் பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளார்.திலீப் சாங்வியின் சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 40ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 30ஆயிரம் கோடியாகும்.
நவீன தாராளமயக் கொள்கைகளால் சாங்வி, அம்பானி, அதானி போன்ற பகாசுர முதலாளிகளின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் நாட்டின் செல்வ செழிப்புக்கு அடித்தளமாக இருந்து வரும் விவசாயிகள் ஏனைய உழைக்கும் மக்கள் வறுமையிலும், ஏழ்மையிலும் சிக்கித் தவிக்கிறார்கள்.

வெள்ளி, 6 மார்ச், 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது மாவட்ட சங்கத்தின் அமைப்பு செயலரும்,கள்ளக்குறிச்சி கிளைத்தளைவருமான தோழர் S.பொன்மலை TM வடக்கனந்தல் அவர்களுடைய ஒரே மகன் திரு.P.சரவணன் தனது இளம்வயதிலேயே ௦5.௦3.2௦15 அன்று  அகால மரணமடைந்தார்  என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.மகனை இழந்து வாடும் தோழர் பொன்மலை அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலையும்,பரிவினையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.இறுதிச்சடங்கு இன்று மாலை வடக்கனந்தல்கிராமத்தில் நடைபெறும்.

மதிய பட்ஜெட்டை கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்




கண்டன ஆர்ப்பாட்டம் -மத்திய சங்கம் அறைகூவல்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
பெரு முதலாளிகளுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் பட்ஜெட்டில் சலுகை … ஏழை எளிய மக்களுக்கோ பட்ஜெட்டில் சுமை … மத்திய அரசை கண்டித்து  பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடத்திட நமது அகில இந்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ் மாநிலச்சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.மதிய,மாநிலச்சங்கங்களின் அறைகூவலின்படி நமது கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் ௦3.௦3.2௦15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம். இதுகுறித்து நமது மாநிலச்செயலர்வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>
 

ஏப்ரல் 21 & 22 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்-FORUM முடிவு

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
மார்ச்மாதம் 17 முதல் நாம் நடத்தவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டு நாள் வேலைநிறுத்தமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<< Read>>>


BSNLஐ காக்க பாராளுமன்றம் நோக்கிய பேரணி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
BSNL நிருவனத்தை லாபம் ஈட்டும் வகையில் மாற்றிட மத்திய அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்,பொதுத்துறை நிருவனமாகவே பாதுகாத்திட வலியுறுத்தியும் நாடுமுழுவதும் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு கோடி கையெழுத்து படிவங்களை பாரத பிரதமரிடம்  25.௦2.2௦15 அன்று புதுடில்லியில் பிரமாண்டமான பேரணி நடத்தி FORUM சார்பாக வழங்கப்பட்டது.இது குறித்த நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>


ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பாஸ்வேர்டு’ தெரியாததால் பாதுகாப்புத்துறை தப்பித்தது மத்திய அரசின் ஆவணங்களை திருடியவர்கள் அதிர்ச்சித் தகவல்



புதுதில்லி, பிப். 21-
பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடை பெற்ற விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கள் கிடைத்துள்ளன என்று தில்லி காவல்துறை தலைவர் பாசி தெரிவித்துள்ளார்.இந்த விசாரணையானது வழக் கின் முக்கியத்துவம் கருதி சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தில்லியின் இணை போலீஸ் கமிஷனர் யாதவ், கூடுதல் கமிஷனர் அசோக் சந்த், துணை போலீஸ் கமிஷனர் பிஷம் சிங்,
உதவி கமிஷனர் மல்ஹோத்ரா மற்றும் போலீஸ் ஆய்வாளர்கள் மற்றும் துணைஆய்வாளர்கள் கொண்ட புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சனிக் கிழமையன்று பத்திரிகையாளர்களிடம் கூறிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை.இந்த வழக்கின் விசாரணையில் திருடப் பட்ட மிக முக்கிய ஆவணங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுபவை.
1. தேசிய எரிவாயு தொகுப்பு குறித்து நிதி அமைச்சரின் பட்ஜெட் பேச்சுக்கான 2 பக்க குறிப்பு;
2. எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினைச் சேர்ந்த விதேஷ் என்பவர் குறித்த ரகசியம் என்று குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்;
3. பிரதமரின் முதன்மைச் செயலர் நிபேந் திரா மிஸ்ராவின் கடிதம்;
4. பெட்ரோலிய அமைச்சகத்தின் எண்ணெய் தோண்டும் துறையின் ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டவை மற்றும் எரிவாயு குறித்த மாத அறிக்கை;
5. இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்த குறிப்பு;
6. அவசரக்கூட்டம் குறித்த ஒரு நோட்டீஸ்; மற்றும்
7. நிலக்கரி மற்றும் எரிசக்தி அமைச்சகங் களிடம் திருடப்பட்ட ஆவணங்கள் என அனைத்தும் திருடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை ரகசியமாக பராமரிக்கப்படுபவை யாகும். இதுபோன்ற எண்ணற்ற ஆவணங்கள் பல காலமாக திருடப்பட்டு ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தரப்பட்டுள்ளன. சில கம்பெனிகள் சாஸ்திரி பவானிலுள்ள கீழ்நிலை ஊழியர் களையே இந்த சட்டவிரோதச் செயலுக்காக நியமித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு கம்பெனிகளின் மூத்த உயர் அதிகாரி களும் அடங்குவர்.
வெள்ளியன்று இரவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த சக்சேனா, ஜூப்லி எனர்ஜி கம்பெனியைச் சேர்ந்த சந்திரா, ரிலையன்ஸ் அடர்க் கம்பெனியைச் சேர்ந்தஆனந்த் , எஸ்ஸார் கம்பெனியைச் சோந்த வினஸ் மற்றும் காய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நாயக் ஆகியோர் உள்ளனர்.இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120(பி)(குற்றச்சதி,)
மற்றும் பிரிவு 411 (மோசடியான முறையில் திருடப்பட்ட பொருளை வாங்கும் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப் பட்டு தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த வழக்கில் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஊழியர் லோகேஷ் என்பவர் தேடப் பட்டு வருகிறார்.
பாதுகாப்புத்துறை தப்பித்தது
பெட்ரோலிய அமைச்சகத்தில் கைதான ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ரகசிய ஆவணங்களை திருடவும் முயற்சித்துள் ளனர். விசாரணையில் அவர்கள், பாதுகாப்புத்துறையின் கணிப்பொறியின் ரகசிய கடவுச் சொல்லை கண்டறிய முடியவில்லை என்று கூறியுள் ளனர். இந்த கூற்று உண்மையா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சந்தேகிக்கப்படும் தனியார் மின்சாரக் கம்பெனிகளின் உயர் அதி காரிகளின் தொலைபேசி உரையாடல்கள் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
இது வரை 100க்கும் மேற்பட்ட உரை யாடல்கள் பதிவு செய்யப்பட்டு அவை அலசி ஆராயப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் சாதாரணமப்பா...
இதுபோன்று ஆவணங்களை திருடுவது சர்வசாதாரணமான ஒன்று என பெருமுதலாளிகளின் அமைப்பான இந்திய தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.35 விழுக்காடு கார்ப்பரேட் கம்பெனிகள் ஆவணங்களை திருடுவதில் ஈடுபட்டு வருகின்றன. பெட்ரோலிய அமைச்சகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து அமைச்சகத்திலிருந்தும் முக்கிய ஆவணங்களை திருடுவது பல பத்தாண்டுகளாகவே நடைபெற்று வருகிறது என இந்திய தொழிற்கூட்டமைப்பின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்தந்த அமைச்சகங்களின் ஊழியர்கள் மட்டுமல்ல,
அமைச்சகத்திலுள்ள உயர் அதிகாரிகளும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அந்தந்த அமைச்சகங்களின் சில குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரை மாதச் சம்பளம் போன்று கையூட்டைப் பெற்று வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. 
நன்றி தீக்கதிர் 22.௦2.2௦15

தமிழ் மாநில FORUM கூட்ட முடிவுகள் . . .

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
சென்னையில் 20.02.15 அன்று நடைபெற்ற   தமிழ்  மாநில FORUM கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள  முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண ..கிளிக் செய்யும்