புதன், 4 அக்டோபர், 2017

BSNLEU/TNTCWU

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்.

போனஸ் ரூபாய் . 7௦௦௦/-  தீபாவளிக்கு முன் வழங்கப்படும்

அன்பார்ந்த தோழர்களே:

வணக்கம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  இந்த ஆண்டு போனஸ் ரூபாய் : 7000 வழங்கப்படும் என நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.

   நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டு போனஸ் ரூபாய் 7000  வழங்க வேண்டுமென நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தது. ஒப்பந்தகாரர் (Balaji Agency) எனக்கு  ஜூலை , ஆகஸ்டு மாத பில் பெண்டிங் உள்ளதாகவும் நிர்வாகம் பட்டுவாடா செய்தால் போனஸ் வழங்குவதாகவும் உறுதியளித்ததின் பெயரில் நமது மாநில, மாவட்ட சங்கள் எடுத்த தொடர்முயற்சியின் காரணமாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாகவும்  ஒப்பந்த காரருக்கு வழங்க வேண்டிய ஜூலை மாத பில்லும்  ஆகஸ்ட் மாதபில்லும் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. அது மட்டுமின்றி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனசாக வழங்க கடலூர் BSNL  நிர்வாகம் ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளர் கணக்கிளும் மாதா மாதம் ரூபாய் : 591  ஒப்பந்தகாரரிடம் செலுத்தி வருகிறது .  

 எனவே இந்த  மாத   ஊதியம் அக்டோபர் முதல் வாரத்திலும் இந்த  ஆண்டுக்கான போனஸ் இரண்டாவது வாரத்திலும் வழங்கப்படும் என்பதை நிர்வாகம் ஒப்பந்தகாரரிடம்  பேசி உறுதி செய்துள்ளது . ஒப்பந்த தாரர் 2017 ஆண்டுக்கான போனஸ் வழங்க மறுப்பதற்கான வாய்ப்பே இல்லை, நம்மிடமிருந்து ஒப்பந்த தாரர் தப்பமுடியாது மாவட்ட நிர்வாகமும் விடாது . தேவைபட்டால் BSNLEU சங்கமும் TNTCWU சங்கமும் வழக்கம் போல் களப்போராட்டதில் இறங்கும். ஒப்பந்த ஊழியர்களின் இம்மாத ஊதியம் மற்றும் போனஸ் பெற்றிட தொடர்முயற்சி எடுத்த நமது மாநில சங்கத்திற்கும் உரிய நேரத்தில் ஊதியம் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்க  நடவடிக்கை மேற்கொண்ட கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் நமது  நன்றியை உரித்தாக்கி கொள்கிறோம்.

தோழர்களே! ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தினை தொடர்ந்து நடத்துவது நமது  சங்கம் மட்டுமே . இதற்கு சான்று கடந்த ஆண்டு நாம் நடத்திய போனசுக்கான போராட்டம் நினைவில் நிற்கும் என நம்புகிறோம். சென்ற ஆண்டு நாம் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் நமது கடலூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்மாநிலத்திலேயே மிக சிறந்த ஒரு டெண்டர் ஒப்பந்தத்தினை உருவாக்கியுள்ளது.  
       இன்று போனஸ் உறுதிசெய்யபட்டுள்ளது என தெரிந்த பிறகு  முன்பே போராட்டம் என்கிற பெயரில் மாலை நேர தர்ணாவை நடத்தும் மாற்று சங்கம்  கடந்த ஆண்டு என்ன செய்தது. சட்டரீதியாக போனஸ் பெற்று தறுவோம் ALC இடம் வழக்கு தொடுத்துவிட்டோம் என கூறிய மற்றொரு சங்கம் கடந்த ஆண்டு என்ன செய்தது. 
மற்றவர்களை போல் போராட்டம் என்கிற பெயரில் அலுவலகம் முடிந்த பின்பு கூடி சோறுபோட்டு உண்ட பின்  கலைந்து செல்லும்  கூட்டம் அல்ல நாம். போராட்ட களம் கண்டு சம்பளத்தை இழந்து களத்தில் நிற்பவர்கள் நாம் என்பதை அனைத்து தோழர்களும் அறிவர். கோரிக்கை விளம்பரம் செய்து ஓர் இடத்தில் கூடி கலைபவர்களும் அல்ல.  கோரிக்கை வைத்து உறுதியோடு களத்தில் நின்று போராட்டம் நடத்தி வெற்றி பெறுபவர்கள் நாம்.

ஒப்பந்த ஊழியர்களுக்கான உரிமைக்கான போராட்டத்தினை தொடந்து நடத்துவோம் வெற்றி பெறுவோம்.

வாழ்த்துக்களுடன்



தோழமையுடன்
M.பாரதிதாசன்                                                                                               K.T .சம்பந்தம்
மாவட்ட செயலர் TNTCWU                        மாவட்ட செயலர் BSNLEU

தகவல் பலகைக்கு இங்கே கிளிக் செய்யவும்...


கருத்துகள் இல்லை: