வியாழன், 1 ஜூன், 2017

இரங்கல் செய்தி

           நமது தபால் தந்தி துறை ஆரம்பகால தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரும், FNTO இயக்கத்தின் மகத்தான தலைவருமான தோழர். கனகசொரூபன் அவர்கள் இன்று 01.06.2017 வியாழன் அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

        அன்னாரது இறுதி ஊர்வலம் 02.06.2016 வெள்ளி கிழமை காலை 09.00 மணிக்கு கடலூரில் காந்தி நகர், செந்தில் இல்லத்திலிருந்து புறப்பட்டு பெண்ணை நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்படும்.

          அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

           குறிப்பு :     கடலூர் தோழர்களின் கவனத்திற்கு BSNL அணைத்து சங்க ஊழியர்களின் சார்பில் 01.06.2017 மாலை 04.00 மணிக்கு கடலூர் CSC வளாகத்திலிருந்து மௌன ஊர்வலம் நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: