வரலாறு என்பது மூலதனத்தினால் மட்டும் எழுதப்படுவதில்லை. மூலதனத்தின்
செயல்பாடு, உழைப்பிற்கும் மூலதனத் திற்குமான திட்டமிடப்படாத பகை மையை
வெளிப்படுத்தும். புதிய தாராளமயச் சூழலில் சில சமயங்களில், முதலாளி
வர்க்கத்தின் விருப்பங்களும் கனவுகளும் கேள்விக்குட் படுத்தப்படுவதில்லை.
அதனால் மூலதனம் தனது பிம்பத்தையே உலகின் பிம்ப மாக, உலகின் தோற்றமாக
காட்டுகிறது. ஆனால் இது இப்படியே ஒருபோதும் இருந் ததில்லை;
எதிர்காலத்திலும் இருக்கப் போவதுமில்லை முதலாளித்துவத்தின் தர்க்கமானது
மனித நாகரீகத்துடன் ஒத்திசைவாக உள்ளது என்று வாதங்கள் வைக் கப்படுகின்றன.
இது, சித்தாந்தரீதியாக விவாதிக்கப்பட வேண்டிய கனமான விசயம் ஆகும்.
இருப்பினும் சுரண்டல் ஆட்சியை ஒரு இயல்பான -ஏற்புடைய நிகழ்வாக மாற்றிக்
காட்டுவதில் இதுவரை முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது.
இதுதான்
பங்குச் சந்தையில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தால் மக்களுக்கு அதிகமான
கவலை அளிக்கிறது. அதே சமயத்தில் அதிகமான வளர்ச்சி என்று கூறப்படும்
போதிலும், கூலி குறைந்தால் அதைப் பற்றி கவலைப்படுவதோ, அது
கவனிக்கப்படுவதோ கூட இல்லை . இது தொழிலாளர் பிரச்சனையில் சமூகம்
அக்கறையின்றி இருப்பதையே காட்டுகிறது. இது வேலை நிறுத்தத்திற்கான தரு ணம்.
தொழிலாளர்களின் குரல்கள் நசுக்கப்படுவதே தற்போதைய அரசின் முக்கியத்
தகுதியாக இருக்கும்பட்சத்தில் , தொழிலா ளர்கள் அரசியலில் தலையிடுவதற்கான
நேரம் இது. தொழிலாளர் சீர்திருத்தங்கள் என்பவை உழைக்கும் வர்க்கத்தின்
மீதான போராகும். தொழிலாளர்களை கொஞ்ச நஞ்சம் பாதுகாக்கின்ற சட்டங்களையும்,
அமைப்புகளையும் கலைப்பதாகும். தொழிலாளர்களுக்கான பங்கை ‘உற் பத்தியில்
நெகிழ்வுத் தன்மை’ என்ற பெய ரில் மேலும் குறைப்பதாகும்.உலகத் தரத்திற்கு
கட்டுமானங்கள் ‘ஸ்மார்ட் நகரங்கள்’ எந்த தடையுமில்லாத உலக மூலதனத்தின்
இயக்கம் என்றெல் லாம் அபிலாசை கொள்ளும் ஒரு நாடு,தொழிலாளர்களின் வாழ்க்கை
தரத்தைஉயர்த்துவது குறித்து மிகவும் விசித்திர மான முறையில் மௌனம்
சாதித்து வரு கிறது. நாம் ஒரு உலகளாவிய ஒப்பீட்டை மேற்கொள்வோம். உலகளவில்
நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவாக வருவாய்ஈட்டும் தொழிலாளர்களின் சராசரி
எண் ணிக்கை 28 விழுக்காடாகும். அது, இந்தியாவில் மிக அதிகம்; அதாவது 59
விழுக் காடு ஆகும்
.இந்தியாவில் மொத்தம் 472 தொழிலாளர்களில் 436 தொழிலாளர்கள், அதாவது 92 விழுக்காடு தொழிலாளர்கள் எந்த தொழிலாளர் சட்டத்திற்கும் அல்லது சமூகபாதுகாப்புத் திட்டங்களுக்கும் கீழ் வராத வர்கள். இந்தியத் தொழிலாளர்களுக்கான முறையான கூலியானது, மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 17.9 விழுக் காட்டினருக்கு மட்டுமே கிடைக்கிறது. இப்படி, தொழிலாளர் சந்தையானது அபாயகரமான நிலையில் உள்ளதை எப்படி நியாயப்படுத்த முடியும்? வேலை செய்பவர்கள் மத்தியில் உள்ளவறுமையானது மிக அதிகமாக உள்ளது. 36விழுக்காடு தற்காலிக பணியிலுள்ள தொழி லாளர்கள்; 24 விழுக்காடு சுய தொழில் செய்பவர்கள் மற்றும் 9 விழுக்காடு முறை யான தொழிலாளர்கள்... இவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களைக் காட்டிலும் குறைவாகவே வருவாய் ஈட்டுபவர்கள். தொழிலாளர் சீர்திருத்தங்களாக முன் வைக்கப்பட்டுள்ளவை, வேலையில் அமர்த்தவும் துரத்தவும் மட்டுமின்றி தற்காலிகமான தொழிலாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் நியமிக்க வும் முதலாளிகளுக்கு அதிக சுதந்திரம் அளித்துள்ளது. ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் கடந்த 1992-93 இல் 10 விழுக்காடு இருந்த ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011-12ல் 34 விழுக்காடாக உயர்ந்துள்ளது. விவசாயமல்லாத வேலை வாய்ப்பில் 68 விழுக்காடு தொழி லாளர்கள் முறைசாரா தொழிலாளர்கள், அதாவது அவர்கள் நிரந்தரமற்ற தற்காலி கப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழி லாளர்கள் ஆவர்.

ஒரு நிரந்தர தொழிலாளிக்கு தினக்
கூலியாக 392 ரூபாய் அளிக்கப்பட்டால் ஒரு தற்காலிக தொழிலாளி தினக் கூலியாக
143 ரூபாயைப் பெறுகிறார். எனவே தொழிலாளர் சந்தையை ‘நெகிழ்வு படுத்துதல்’
என்ற பெயரில் ஒரு நிரந்தர தொழிலாளிக்கு அளிக்கும் கூலியில் மூன்றில் ஒரு
பங்கை மட்டும் தற்காலிக தொழி லாளிக்கு அளிக்க வைத்து முதலாளியின் லாபத்தை
கொழிக்க வைத்துள்ளது அரசு.இந்தியாவில் தொழிலாளர்களுக்கு கூலியானது
முதலாளிகளின் லாபத்தி லிருந்து எடுத்து அளிக்கப்படுகிறதா? உறுதியாக இல்லை.
கீழ்க்கண்டதகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. முதலாவது, அனைத்து
தொழிலாளர் களுக்கு அளிக்கப்படும் கூலி உள்ளிட்ட அனைத்து பயன்களும் கடந்த
1981-82ல் 47 விழுக்காடாக இருந்தது 2010-11ல் 25 விழுக்காடாக குறைந்து
விட்டது. அமைப்புரீதியான உற்பத்தி நடைபெ றும் தொழிற்சாலைகளில்
கூலியானது25.9 விழுக்காட்டிலிருந்து 9.9 விழுக்காடாக குறைந்து விட்டது.
அதே காலகட் டத்தில் தொழிலாளர் ஒவ்வொருவரும் உருவாக்கிய 100 ரூபாய் அளவிலான
உற்பத்தி மதிப்புக்கு 9.9 விழுக்காடே கூலி யாக கிடைத்துள்ளது.இரண்டாவதாக,
2000ஆம் ஆண்டு களின் பிற்பகுதியில் தொழிலாளர் உற் பத்தி அதிகமான அளவில்
இருந்த போதும் -அதாவது 6.4 விழுக்காடு உயர்வாக இருந்தபோதும் -
அவர்களின்
கூலி மதிப்பு வெறும் 1.4விழுக்காடாக இருந்துள்ளது. எனவே, உற்பத்தி
குறைவாக இருப்ப தால்தான் தொழிலாளர்களுக்கு குறை வாக கூலி அளிக்கப்படுகிறது
என்று சொல்பவர்களானால் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது தொழிலாளர்க்கு உரிய
கூலியை அளிக்காமல் மிகவும் குறைவாக அளிக்கப்படுவதேன்? மூன்றாவதாக,
முதலாளிகள் தொழிலாளர்களுக்கு பதிலாக எந்திரங்களை பயன்படுத்துவதில் ஆர்வம்
காட்டுகின்றனர். ஏனெனில் எந்திரங்கள் என் பவை ‘இறந்த உழைப்பாகும்’.
(மாமேதை கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்: “எந்திரங்கள் என் பவை கடந்த காலத்தில்
தொழிலாளர்கள் உழைத்து முதலாளிகள் ஈட்டிய லாபமே எந்திரங்களாக மாறியுள்ளன
என்பதால், அவை அந்தத் தொழிலாளர்களின் இறந்துபோன உழைப்பாக (மறைமுக
உழைப்பு)கருதப்பட வேண்டும்”. இறந்து போனஉழைப்பு நிகழ்கால உழைப்பின் மீது
அதாவது தொழிலாளர்களின் மீது அதிகாரம் செலுத்திச் சுரண்டுவதை தனது மூல
தனத்தில் விரிவாக ஆய்வின் மூலம் குறிப்பிடுகிறார்.) உயிரோடு இருக்கும்
நிகழ்கால உழைப்பை விட இறந்த உழைப்பை கை யாள்வது முதலாளிகளுக்கு எப்போதுமே
எளிமையானதுதானே. மேலும் உலகமயமாக்கப்பட்ட சந்தையில் தொழில்நுட்பத் தரங்களை
உயர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கும் முதலாளிகள் தள்ளப்படுகின்றனர். இதன்
விளைவு, மூலதனத்தின் திரட்சி அதிகமாகிறது என்பது வெளிப்படை. இது மேலும்
அதிர்ச்சிக்குரிய விசயங்களுக்கு இட்டுச் செல்கின்றது. அமைப்பாக்கப்பட்ட
உற்பத்தி நடைபெறும் தொழிற்சாலைகளில் மொத்த உற்பத்தியில் தொழிலாளர்களுக்கான
செலவு என்பது கடந்த 2012-13ல் 2.17 விழுக்காடாக குறைந் துள்ளது. எனவே
உற்பத்திக்கு குறைந்த தொழிலாளர்களே தேவைப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல,
அந்தக் குறைவான தொழிலாளர்களுக்கும் குறைவான கூலியே அளிக்கப்படுகிறது.வறட்சி
நிலைமைகளுக்கான கூலி மற்றும் அதிகமான வேலை மற்றும் அதிகமான உற்பத்தி
ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது தொழிலா ளர்கள் நியாயமான
கூலியாக மாதத்திற்கு ரூபாய் 15,000த்தை கோருகின்றனர். வரும் செப்டம்பர்
2ம் தேதி வேலை நிறுத்தத்தில் முன்வைக்கப்படும் முக்கிய மான கோரிக்கைகளில்
இதுவும் ஒன்று. தொழிலாளர் அமைச்சகத்திலுள்ள அதிகாரிகள், ஊடகத்தின் மூலம்
மோடி அரசு குறைந்தபட்ச கூலியை உயர்த்தப் போவதாக கட்டுக் கதைகளை பரப்பி
தொழிலாளர்களை திசை திருப்புகின்றனர். இது வேலைநிறுத்தத்தினை சீர் குலைக்க
மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும். இருப்பினும், எந்த அதிகார
வட்டாரங்களிலும், தொழிலாளர் மாநாட்டில் கூட இப்பிரச்சனை அரசினால்
தீர்க்கப்பட வில்லை. மோடி குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைப்பதாக உலகம்
முழுவதும்இந்தியாவை விற்றுக்கொண்டிருக்கிறார்.தொழிலாளர் சட்டத்தை
அமல்படுத் தும் கட்டமைப்பை திட்டமிட்டு அழிப்பதை கடந்த இருபத்தைந்து ஆண்டு
களாக அனுபவித்து வருகிறோம் . இந்தஅமைப்பை வலுப்படுத்துவதும்
புதுப்பிப்பதும் ஒரு முக்கியமான கோரிக்கையா கும். நெருக்கடிகளின்போதுதான்
வரலாறு கள் உருவாக்கப்படுகின்றன. தொழிலாளர் வர்க்கம் இதுபோன்ற தருணங்களில்
எழுச்சியுற வேண்டும். இதுபோன்ற தலையீடுகளினால் மட்டுமே எதிர்காலத்தில்
மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத திட்டங்கள் முறியடிக்கப்படும்.
தமிழில் - சேது நன்றி தீக்கதிர் 31.08.2015
தமிழில் - சேது நன்றி தீக்கதிர் 31.08.2015