செவ்வாய், 9 ஜூன், 2015

கடலூர் மாவட்ட FORUM கூட்டம் முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
08.06.2015 அன்று கடலூர் மாவட்ட FORUM கூட்டம் தோழர் R.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.அதில் FORUMத்தில் அங்கம் வகிக்கும் SNEA(I) சார்பில் தோழர்கள் C.பாண்டுரங்கன், R.அசோகன் ஆகியோரும், 
AIBSNLEA சார்பில் தோழர்கள் K.தனசேகரன், வெற்றிவேல், ஆனந்த் ஆகியோரும், NFTE சார்பில் தோழர் R.பன்னீர்செல்வம் BSNLEU  சார்பில் தோழர் R.V.ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் அனைத்திந்திய FORUM விடுத்துள்ள அறைகூவலை கடலூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் அமுலாக்க தனது முன்மொழிவுகளை தெரிவித்தார்.மேலும் இக்கூட்டத்தில் AIBSNLEA மாவட்ட செயலர் கொடுத்த கடிதம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட நிர்வாகத்தை DGM(CFAவை ) 09.06.2015 அன்று கூட்டாக சந்திப்பது.BSNLதலைமையகம் அறிவித்துள்ள இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையில் தரைவழி தொலைபேசிகளுக்கு வழங்க இருக்கும் இலவச அழைப்பு திட்டம் குறித்து பொது மக்களிடம் கொண்டுசெல்வது குறித்த நமது FORUM எடுக்க இருக்கும் நடவடிக்கைகளுக்கு நிர்வாகத்தின் ஒத்துழைப்பை கோருவது.

கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு FORUM செயலர் பெயரில் வந்துள்ள மொட்டை கடிதத்திற்கும் கடலூர் FORUMத்திற்கும் சம்பந்தமில்லை என்று கடிதம் கொடுப்பது.

கருத்துகள் இல்லை: