சனி, 25 அக்டோபர், 2014
க்ளீன் இந்தியா!
`நாங்கள்
ஆட்சிக்கு வந்தால் வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்
பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம்; இதில் ஏதேனும் சட்டச் சிக்கல்
ஏற்பட்டால், சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்; தேவைப்பட்டால்,
புதிய சட்டத்தை இயற்றுவோம். இது ஒரு தலையாயப் பிரச்சனை என்பதால், இதற்கு
முன்னுரிமை கொடுப்போம்’-நாடாளு மன்றத் தேர்தலின்போது பாஜகவின் தேர்தல்
அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி இது.`கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு
வந்தால், ஒவ்வோர் இந்தியருக்கும் மூன்று லட்சம் ரூபாய் வழங்கலாம்’ என, தனது
பிரச்சாரத்தில் முழங்கியவர் நரேந்திர மோடி. `வெளிநாடுகளில் கறுப்புப் பணம்
பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்’ என
எத்தனையோ முறை நாடாளுமன்றத்தையே முடக்கிய கட்சிதான் பாஜக.
ஆனால்,
அது மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில்
தெரிவித்துள்ள கருத்து, கடும் அதிர்ச்சி ரகம்.`கறுப்புப் பணம் தொடர்பாக
வெளிநாடு களிடம் இருந்து பெற்ற தகவல்களையோ அல்லது நபர்களின் பெயர்களையோ
பகிர்ந்துகொள்ள முடியாது. அப்படிச் செய்தால், சம்பந்தப் பட்டவர்கள் உஷார்
ஆகி விடுவார்கள். மேலும் அது, சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுடன் இந்தியா
கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும்‘ என்கிறது மத்திய அரசு.
கடந்த பல ஆண்டுகளாகக் கேட்டுக் கேட்டுச் சலித்த அதே சப்பைக்கட்டு பதில்.
சொல்லும் வாய்கள்தான் வேறு வேறு. அப்போது காங்கிரஸ்; இப்போது
பாஜக.வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்குவது நாட்டின் முதுகெலும்பான
பொருளாதாரத்தையே முடக்கிப்போடும் கொடும் செயல். அதற்கு மிகக் கடுமையான
நடவடிக்கைகள் தேவை. தேர்தலுக்கு முன்னர் வாக்கு வாங்க ஒரு பேச்சு;
தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி செய்ய வேறு பேச்சு என்ற மோடி மஸ்தான் வேலை,
ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.
இப்போது நமது தேவை மிகக்
கடுமையான நடவடிக்கை. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக்
குழுவின் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். பதுக்கப்பட்ட பணத்தை மீட்டு,
பதுக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் பாய வேண்டும். சொன்னதைச் செய்யுங்கள்
மோடி. நமக்குத் தேவை நாவரசு அல்ல. நல்லரசு!வீதிகளில் படிந்துள்ள குப்பைகளை
அகற்ற `க்ளீன் இந்தியா’ பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடி, இந்தத் தேசத்தின் நிர்வாக அமைப்பில் படிந்துள்ள ஊழல்
என்னும் பெருங்கறையைத் துடைத்து எறிய களம் இறங்க வேண்டியதே, மிக, மிக, மிக,
மிக முக்கியம்!நன்றி : ஆனந்தவிகடன் (அக்.29) தலையங்கம்
நன்றி தீக்கதிர் 25.10.2014
மேக் இன் இந்தியா’
“மேக்
இன் இந்தியா” முழக்கத்திற்கு புதிய சின்னம். புதிய இணையதளம், தேசிய தரக்
கழகத்திற்கு புதிய தலைவர் என ஜமாய்க்கிறார்கள். இந்து நாளிதழ்
கட்டுரையொன்றில் பெங்களூர் தொழிலதிபரும், தட்கசீலா பல்கலைக்கழகப்
பேராசிரியருமான ஒரு நிபுணர் சொல்வது போல “சத்தம் அதிகமாக உள்ளது. ஆனால்
அதற்கான திட்டம் இல்லை.”ஆதாரத் தொழில் வளர்ச்சி இல்லாமல் உற்பத்திக்கான
உந்துதல் எழாது. நிறைய முதலீட்டோடு, நீண்ட காலத் திட்டமாக வளர வேண்டிய
ஆதாரத் தொழில்களை சூ..... மந்திரக்காளி..... என்று மோடியால் உருவாக்க
முடியுமா? மும்பையின் ஜவகர்லால் நேரு துறைமுகம்தான் இந்தியச் சரக்கு
இறக்குமதியில் 55 சதவீதத்தைக் கையாள்கிறது. ஆனால் அங்கு வந்து
இறக்குமதியாகிற சரக்குகள் தில்லிக்கு டெலிவரி ஆக 28 நாட்கள் எடுக்கிறதாம்.
2012ல் ஐஐஎம்- இந்திய போக்குவரத்துக் கழகம் நடத்திய ஆய்வின்படி
இந்தியாவில் போக்குவரத்து கியூ வரிசைகள் நீள்வதால் ஏற்படுகிற இழப்பு
ரூ.60,000 கோடிகளாம்.இந்தியாவின் தேசியச் சுவையாக புளிப்பை அறிவிக்கலாம்
போலிருக்கிறது. இதுபோன்ற முழக்கங்கள் எத்தனையோ முறை புளித்திருந்தாலும்
மறுபடியும் மறுபடியும் மக்கள் மயங்குகிறார்கள். இந்தியத் துணிகள்
ஏற்றுமதிக்காக குர்கானில் “அப்பேரல் இன்டர்நேசனல் மார்ட்” 250 காட்சி
அறைகளோடு உருவாக்கப்பட்டது. தற்போது அதில் 94 காட்சி அறைகளில் பூட்டு
தொங்குகின்றன. 81 காட்சி அறைகள் வேறு நோக்கங்களுக்கு வாடகைக்கோ,
டெக்ஸ்டைல் கல்விக் கழக வகுப்புகளுக்கோ பயன்படுத்தப்படுகின்றன. மீதம் 75
காட்சி அறைகளில்தான் விற்பனை நடக்கிறதாம்.
அவற்றிலும் பல
நிரந்தரமாகச் செயல்படுவதில்லை.“மேக் ஃபார் இந்தியா” என்ற இலட்சியமும்
இணையாவிட்டால் மேக் இன் இந்தியா முழக்கம் வெற்றுக் கூச்சலாகிவிடுமென
நிபுணர்கள் பலர் கருதுகிறார்கள். சந்தை விரிவானால்தான் “மேக் ஃபார்
இண்டியா” என்று அழைப்பு விடுக்க முடியும். சர்வதேச சந்தையில் கச்சா
எண்ணெய் விலைகள் சரியும்போது கூட இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தால் சந்தை
எப்படி விரிவாகும்? ஃபிலிப் கார்ட் “பில்லியன் டே” (நூறு கோடி வணிக
தினம்)- அக்டோபர் 6 அன்று கொண்டாடிய போது மூன்று லட்சம் பேர் மதியம் 2
மணிக்குள்ளாக புகுந்து எல்லாவற்றையும் 70 சதம், 80 சதம் தள்ளுபடியில் காலி
செய்தார்கள். இப்படி வணிகச் சங்கிலிகளை நொறுக்கி எறியும் போது ஒரு புறம்
உயர்தட்டுச் சந்தை பலனடைந்தாலும் மறுபுறம் சங்கிலிகளோடு தொடர்புடைய
மக்களின் வாங்கும் சக்தி சரிகிறது. சந்தை சுருங்குகிறது.
இது ஒரு
உதாரணமே. சந்தை விரிவாக்கம் இல்லாமல் மேக் ஃபார் இந்தியா எப்படி
ஈடேறும்.பர்ஸ்ட் டெலவப் இந்தியா என்பது எப்டிஐ (FDI) க்கு மோடி தந்துள்ள
விளக்கம். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கெல்லாம் சைசுக்கேற்ற பூட்டு
தேடி அலைகிறார் மோடி. எச்.எம்.டி வாட்ச் கம்பெனியை மூடப்போவதாக மத்திய
அரசு அறிவித்துள்ளது. மூன்று தலைமுறைகளின் முதல் வாட்ச் என்ற
சென்டிமென்டோடு இருந்த நிறுவனம் அது. எச்.எம்.டி மூடப்படுமென்ற செய்தி
வந்தவுடன் பெங்களூரிலுள்ள அதன் காட்சி அறைகளிலெல்லாம் விற்பனை
இரட்டிப்பானதாம். இவ்வளவு பிராண்ட் இமெஜ் உள்ள பெருமை மிக்க நிறுவனத்தைப்
பாதுகாக்காமல் வளர்க்காமல் மேக் இன் இந்தியா என்றால் யார் நம்புவது?அவுட்
சோர்சிங்தான் உலகமயத்தில் இந்தியாவிற்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.
ஆனால்
மின்சார வெட்டால் இந்தியாவிலுள்ள அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு ஓராண்டில்
ஏற்பட்ட இழப்பு ரூ.1600 கோடியாம்.மலிவான உழைப்பு இந்தியாவில் கிடைக்கிறது.
இன்னும் மலிவாக்க சட்டங்களைத் திருத்துகிறறோம். உரிமைகளைப் பறிக்கலாம்.
பணிப் பாதுகாப்பை பந்தாடலாம். உங்களின் லாபத்தை பெருக்குங்கள் என
பன்னாட்டு மூலதனத்திற்கு வைக்கப்படும் தாம்பூலமே “மேக் இன் இந்தியா.”
நன்றி தீக்கதிர் 25.10.2014
நன்றி தீக்கதிர் 25.10.2014
வெள்ளி, 24 அக்டோபர், 2014
பொலிவியாவைப் பாருங்கள் மோடி முதலாளித்துவத்துக்கு எதிரான போரில் பொலிவியாவைப் பின்பற்றுமா உலகம்?

லத்தீன்
அமெரிக்க நாடான பொலிவியாவில் சென்ற வாரம் நடந்த அதிபர் தேர்தலில் ஈவோ
மொராலிஸ் 60 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் முறையாக அமோக வெற்றி
பெற்றிருக்கிறார். ஈவோ மொராலிஸ் பொலிவியாவின் பெரும்பான்மையான, ஆனால்
காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களிலிருந்து தோன்றிய முதல்
அதிபர். பல காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், பெருநிறுவன அசுரர்களும்
பொலிவியாவைக் கொடிய சுரண்டலுக்கு உள்ளாக்கி, தங்கள் கைப்பாவை அரசுகள் மூலம்
நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர்.
அந்தசகாப்தத்தை 2005-ல் முடிவுக்குக்
கொண்டுவந்து, பெரும் மக்கள் ஆதரவுடன் மொராலிஸும், அவர் தலைமையிலான
சோஷலிஸத்தை நோக்கிய இயக்கமும் வெற்றி கண்டன.முந்தைய இருண்ட சகாப்தத்தில்
பொலிவிய மக்கள் கொடும் இழப்புகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் உள்ளானார்கள்.
அனைத்து வளங்களும் பெரும் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டன.
நவதாராளமயம் (நியோலிபரலிஸம்) தலைவிரித்தாடியது. சந்தையின் மகிமை தாரக
மந்திரமாக ஓதப்பட்டது. தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும்
தனியார்மயமாக்கப்பட்டன. ஏழ்மையும் கொள்ளையும் எல்லை மீறியபோது, மக்கள்
இயக்கங்கள் வெடித்துக் கிளம்பின.
தண்ணீருக்கான போராட்டம்,
எரிவாயுவைக் காப்பதற்கான போராட்டம் என்று நாடு கொதித்தது. அந்தக்
கொந்தளிப்பின் குழந்தையாக, அதன் தலைவராக மொராலிஸ் எழுந்தார்.2009-ம் ஆண்டு
புதிய அரசியல் சாசனம்பிரகடனப் படுத்தப்பட்டது. அதில் இந்தியாவையும், மற்ற
பல நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் சித்தாந்தமான நவதாராளமயம் கடுமையாக
எதிர்க்கப்பட்டு, பொருளாதார நிர்வாகத்தில் அரசுக்குத் தலைமை ஸ்தானம்
அளிக்கப்பட்டது. சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டன.
ஏழ்மை ஒழிப்புக்கான திட்டங்கள் முன்னுரிமை பெற்றன.
மக்களுக்காகத்தான் நாடு
கடும்
ஏழ்மையிலும், எழுத்தறிவின்மை யிலும் ஆழ்ந்து கிடந்த நாடு பொலிவியா. கடந்த
ஒன்பது ஆண்டுகளில் ஏழ்மை ஒழிப்பை முன்னிறுத்தி, வியத்தகு வளர்ச்சியையும்,
அனைத்து மக்களும் நலனடையும் வகையிலான ஜனநாயகத்தையும் நிறுவி அந்த நாடு
வெற்றி கண்டிருக்கிறது. சோஷலிஸத்தை நோக்கித் திரும்பிய புதிய எழுச்சிப்
பாதையினால்தான் இந்த வரலாற்றுச் சாதனை சாத்தியமாயிற்று. மொராலிஸின்
ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2006-ல் இருந்ததைவிட, 2012-ல்
இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அதனினும் மகத்தானது ஏழ்மை ஒழிப்பில் அதன்
சாதனை. ஏற்றத்தாழ்வுகளும் குறைந்து வருகின்றன.
சமுதாய ஏணியின்
உச்சியில் இருந்த 20 சதவீதத்தினரின் கையில் இருந்த தேச வருமானம் குறைந்து,
கீழ்த்தட்டில் உள்ள 20 சதவீதத்தினரின் பங்கு அதிகரித்திருக்கிறது. மிகுந்த
ஏழ்மையில் வாடிய மக்களுக்கு நாட்டின் செல்வத்தின் கணிசமான பகுதியை மாற்றி
அளிப்பதில் பொலிவியா வெற்றி கண்டிருக்கிறது என்று ஐநா சபையின் வளர்ச்சி
அமைப்பு (யூ.என்.டி.பி.) பாராட்டுகிறது. பணவீக்கம் பெருமளவு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, லத்தீன் அமெரிக்காவிலேயே குறைந்த
பணவீக்கம் உடைய நாடாக பொலிவியா மாறியிருக்கிறது.
இந்தப் பொருளாதார
வளர்ச்சியின் முதல் ஆயுதமாக அமைந்தது அரசுடமையாக்கும் கொள்கை. பொலிவியாவின்
பெரும் வளமான இயற்கை எரிவாயு அதற்கு முன் அமெரிக்க, உள்ளூர்
பெருமுதலாளிகளின் வசம் இருந்தது. அது 2006-லிருந்து படிப்படியாக
அரசுடமையாக்கப்பட்டது. விளைவு: உற்பத்தி இரு மடங்குக்கும் அதிகமாயிற்று.
தொடர்ந்து, இத்தாலிய முதலாளிகளின் கையிலிருந்த தொலைத்தொடர்பு சாதனத்
தொழில், தகரம், துத்தநாகம் போன்றவற்றின் உற்பத்தி அனைத்தும்
அரசுடமையாக்கப்பட்டன.
ஏற்றம் பெறும் வாழ்க்கை
அத்துடன்,
அடித்தட்டு மக்கள் அனைவரும் பயனடையும் பிரம்மாண்டமான நலத்திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ வசதிக்கும்,
பிரசவத்துக்குப் பின் தாய்-சேய் இருவர் நலனுக்குமான பண உதவி வழங்கியது;
கல்விக்கான பெரும் நிதி ஒதுக்கீடு செய்தது; தோழமை நாடுகளான கியூபா,
வெனிசுலாவின் உதவி யுடன், அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வி பெறும்
திட்டங்கள் உருவாக்கியது; 60 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கண்ணியமான
ஓய்வூதியம் வழங்கியது ஆகியவை பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மறக்க
முடியாத முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன. சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட
நிலப்பட்டாக்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. அதேபோல் பெண்களுக்கு
பொலிவியாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் பாராட்டியாக வேண்டும்.
நாடாளுமன்றத் தில் 28சதம் பெண்கள்; செனட்டில் 47 சதம் பெண்கள்;
அமைச்சரவையில் பாதி (10 பேர்) பெண்கள்; அதில் மூவர் பழங்குடியினர்.
முழு வேலையுடைமை
கல்விக்காக
மொராலிஸ் மேற்கொண்ட இயக்கம் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. பொலிவியா
எழுத்தறிவின்மையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது என்று யுனெஸ்கோ
அறிவித்திருக்கிறது. அரசு பிரம்மாண்டமான கட்டமைப்புத் திட்டங்களைப்
பொதுத்துறையின் வழியாக மேற்கொண்டதன்மூலம் பொலிவியா அநேகமாக முழு
வேலையுடைமையை அடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மக்கள்
நலனுக்காகப் பெருமளவு செலவு செய்யும் அரசு, நமக்கெல்லாம் உபதேசம் செய்வதைப்
போல் சிக்கனம் பிடிக்கும் அரசு அல்ல. இத்தனைக்குப் பின்னும், இன்று
உலகிலேயே அதிக சதவீதம் நிதி சேமிப்பு கொண்ட நாடு என்று பன்னாட்டுச் செலாவணி
நிதியம் (ஐ.எம்.எஃப்) பொலிவியாவுக்குச் சான்றிதழையும் பாராட்டுதலையும்
வழங்கியிருக்கிறது. ஆனால், பொலிவியஅரசு அந்த அமைப்பைச் சந்தேகத்து டன்
பார்த்து, இன்னும் அதிகமாகச் செலவழிக்கலாமோ என்று யோசித்துவருகிறது. இவை
அனைத்துமாகச் சேர்ந்து, அரசு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
முதலாளித்துவ இந்தியா
இந்தியா
இன்று கடைப்பிடிக்கும் பாதை இதற்கு எதிர்மறையானது என்பது
சொல்லத்தேவையில்லை: கடைந்தெடுத்த நவதாராளமயம், அனைத்தும் தனியார் மயம்,
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றல்,அந்நிய, உள்நாட்டுப் பெரும்
முதலாளிகளின் தேவைக்கேற்ற கொள்கைகள், வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி,
உலகிலேயே அதிக அளவில் தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, சுகாதார அமைப்புகள்,
அரசின் முதலீட்டையும், செலவையும் குறைக்கும் சிக்கனம் என்று
அடுக்கிக்கொண்டே போகலாம்.லத்தீன் அமெரிக்கா முழுவதையும் தன் உடும்புப்
பிடியில் வைத்திருந்த அமெரிக்காவின் பெரும் எதிர்ப்பு களுக்கு இடையில்தான்
பொலிவியாவின் சாதனைகள் சாத்தியமாகியிருக்கின்றன.
சமீபத்தில் நடந்த
தேர்தலிலும் மொராலிஸை எதிர்த்த வேட்பாளர், அமெரிக்காவின், பெரும்
முதலாளிகளின் பிரதிநிதியாகத்தான் போட்டியிட்டார். நாட்டின் பல வளங்களும்
நிறுவனங்களும் இன்னும் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, நாட்டின் ஊடகங்கள் இன்னும்வலதுசாரி சக்திகளான பெரும்
முதலாளிக ளின் கையில் தான் இருக்கிறது. அவையெல்லாம், மொராலிஸுக்கு எதிரான
பிரச்சாரத் தில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. ஆனால்,பெருநிறுவன ஊடகங்கள்
செய்யும் பொய்ப்பிரச்சாரத்துக்கு மக்கள் வீழ்ந்துவிடுவதில்லை.
கொடிய எதிரி
வட
அமெரிக்க சாம்ராஜ்யத்தின் கொடும் கொலைப் பிடியிலிருந்தும், பன்னாட்டுச்
செலாவணி நிதியத்தின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்தும் தப்பியதால்தான், தன்
நாட்டை உயர்த்த முடிந்தது என்று மொராலிஸ் கூறுகிறார். “முதலாளித்துவம் மனித
சமுதாயத்தின், சுற்றுச்சூழலின், இந்த பூமியின் கொடிய எதிரி என்பதில்
எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்று மொராலிஸ் கூறுவதை நாம் கவனிக்க
வேண்டும்.அத்துடன், பொலிவியாவின் மிகப் பெரும்பலம் லத்தீன் அமெரிக்க
நாடுகள் சிலவற்றிடையே தோன்றியிருக்கும் அற்புதமான ஒருமைப்பாடும் தோழமையும்.
இன்று கியூபா, வெனிசுலா, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, சிலி உள்ளிட்ட
லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இடதுசாரி
புரட்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன.
தங்களுக்குள்ளாக
வலிமைமிக்கக் கூட்டு அமைப்பையும் அந்த நாடுகள் உருவாக்கியுள்ளன. அதன் ஒரு
அத்தியாயம்தான் பொலிவியாவின் எழுச்சியும், மக்கள் ஆதரவு அரசியலும்.
மொராலிஸ் வணங்கும் முன்னோடிகள் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் சே
குவேராவும், சமீபத்தில் மறைந்த வெனிசுலாவின் சாவேஸும்.புகழ் பெற்ற அரசியல்
சிந்தனையாளரும், உலக ஆன்மாவின் குரல் என்று போற்றப்படுபவருமான நோம்
சாம்ஸ்கி சொல்கிறார், “பொலிவியா தனது சிறந்த முன்னுதாரணத்தினால், உலக
முதலாளித்துவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கிறது.” உலக முதலாளித்
துவத்துக்கு அச்சுறுத்தல்; நம்மைப் போன்ற நாடுகளின் மக்களுக்கு வழிகாட்டி.-
கட்டுரையாளர், வே.வசந்திதேவி கல்வியாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்நன்றி : தமிழ் இந்து (21-10-14)
கட்டுரையாளர், வே.வசந்திதேவி கல்வியாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்நன்றி : தமிழ் இந்து (21-10-14)
கறுப்புப் பண குறளி வித்தை!

குறளி வித்தை காட்டுகிறவர்களை இப்போது பெரிய அளவுக்குப் பார்க்க
முடிவதில்லை. உடுக்கடித்து ஊரைக்கூட்டி, “பாதியில் திரும்பிப் போனால் ரத்த
வாந்தி எடுப்பீர்கள்” என்று மிரட்டி நிற்கவைப்பார் வித்தைக்காரர். திடீரென
“யாரோ” ஒருவர் வாயில் நுரை தள்ள “மயக்கம் போட்டு” கீழே விழுவார்.
குங்குமத்தை வீசி அவரது முகத்தோடு சேர்த்து உடலைத் துணியால் மூடிவிடுவார்.
அப்புறம் நின்றுகொண்டிருக்கிற யாரோ ஒருவரின் அடையாளம், அங்க லட்சணம்,
சட்டையின் நிறம், பையில் வைத்திருக்கிற பொருள் என்று மயங்கிக்கிடப்பவர்
சரியாகச் சொல்வார். தங்களுடைய வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறிவிடும் என்று
சிலர் எச்சரிக்கையோடும், மகிமையை நம்புகிற சிலர் ரத்த வாந்திக்குப்
பயந்தும், இதிலெல்லாம் நம்பிக்கையில்லாதவர்கள் வேடிக்கை பார்த்த
பொழுதுபோக்கிற்காகவும் வித்தைக்காரர் விரித்து வைத்த துண்டில் காசுகளைப்
போட்டுவிட்டு நகர்வார்கள். எல்லோரும் போன பிறகு, வித்தைக்காரர், அந்த யாரோ
ஒருவருக்குரிய வசூல் பங்கைக் கொடுத்துவிட்டு வேறு ஊருக்குச் செல்வார்.
அங்கேயும்
கூட்டத்தில் அந்த “யாரோ” ஒருவர் போய் நிற்பார்...இந்தக் குறளி வித்தையை
இன்று பார்க்க முடியாத தலைமுறையினரின் ஏக்கத்தைப் போக்க உடுக்கடிக்கத்
தொடங்கியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. கீழே விழுந்து
கிடந்து, பார்வையாளரகளின் ரகசியத்தைப் போட்டு உடைக்கிற “யாரோ” ஒருவரது
இடத்தில் இருப்பது வெளிநாட்டு வங்கிகள். துண்டுக்குள் மறைந்துகொண்டு
அந்நிறுவனங்கள் வெளிப்படுத்தப் போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பது, தங்களிடம்
ரகசியமாகக் கணக்கு வைத்திருக்கிறவர்களின் பெயர்களையும், அவர்கள் போட்டு
வைத்திருக்கிற கறுப்புப் பண விவரமும்.ஒரு சின்ன வேறுபாடு - குறளி
வித்தைக்காரரைப் பொறுத்தவரையில், அவரது மறைமுகக் குறிப்புகளின்படி
படுத்துக்கிடப்பவர் பதிலளிப்பார்.
கறுப்புப்பண வித்தையைப்
பொறுத்தவரையில், படுத்துக்கிடப்பவராகிய வெளிநாட்டு வங்கிகளும் அரசுகளும்
சொல்லச் சொல்வதை ஜெட்லி சொல்லிக்கொண்டிருக்கிறார்.கடந்த மக்களவைத்
தேர்தலில், வேறு எதையும் விட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள
கறுப்புப் பணம் மீட்கப்படும் என்பதைத்தான் பெரிதாக முழங்கினார்கள்.
ஆட்சிக்கு வந்த பின்னர், உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒரு குழுவை நியமித்தார்கள்.
இப்போது அந்தக் குழுவின் முயற்சியால் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து, அங்கே
கறுப்புப் பணம் போட்டு வைத்திருக்கிறவர்களுடைய பெயர்ப்பட்டியல்
வந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்தப் பட்டியலை, வேண்டுமானால் இந்த
வழக்கைத் தொடுத்தவரான வழக்குரைஞர் ராம் ஜெத்மலானிக்கு மட்டும் காட்டுகிறோம்
என்றார்கள். சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பைத்
தவிர்ப்பதற்கான உடன்பாடு இருப்பதாகக் கூறி, அதன்படி பெயர்களை வெளியிட
இயலாது என்கிறார் ஜெட்லி!ஆக, பட்டியலில் யார் பெயரெல்லாம் இருக்கிறது
என்பது தெரியும் என்றாலும், அவர்கள் யார் என்பதாலேயே அவர்களுடைய பெயர்களை
வெளியிட இந்த அரசு மறுக்கிறது என்பதைக் குறளிவித்தை சூக்குமம்
அறிந்தவர்களால் ஊகிக்க முடிகிறது.
காங்கிரஸ் தலைவர்களோ, “இதைத்தானே
முன்பு எங்கள் ஆட்சியின்போது சொன்னோம், அப்போது எங்களைக் கறுப்புப் பண
பாதுகாவலர்கள் என்று தாக்கிவிட்டு இப்போது நீங்கள் அதே காரணத்தைச் சொல்லி
பெயர்களை வெளியிட மறுப்பது ஏன்,” என்று புலம்புகிறார்கள்.உடனே அருண்
ஜெட்லி, “பெயர்ப்பட்டியலை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம்
ஏற்படும் பரவாயில்லையா,” என்று கேட்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில்
ஒருவரான அஜய் மக்கேன், “இப்படி பிளாக் மெயில் செய்கிற வேலையெல்லாம்
வேண்டாம்... தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட
வேண்டியவர்கள்தான். தில் இருந்தால் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம்,”
என்று சவால் விடுகிறார்! பாதி உண்மையை மட்டும் சொல்லிக்கொண்டிராமல்,
தேர்ந்தெடுத்த சில பெயர்களை மட்டும் கசியவிடாமல் முழுதாக வெளியிட
வேண்டியதுதானே என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
முன்னாள் காங்கிரஸ்
கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறதே என்று
பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இதை நான் ஒப்புக்கொள்ளவுமில்லை,
மறுக்கவுமில்லை... புன்னகை மட்டுமே செய்கிறேன்,” பஞ்ச் டயலாக்
பேசியிருக்கிறார் ஜெட்லி.அந்தப் புன்னகையின் பின்னணியில், வெளிப்படுத்த
முடியாத வேறு முக்கியமானவர்களின் - அதாவது ஆளுங்கட்சிக்கு
முக்கியமானவர்களின் - பெயர்கள் இருக்கலாம் என்று, குறளி வித்தைக்காரரின்
மகிமையில் நம்பிக்கையில்லாமல் வேடிக்கை பார்க்கிறவர்கள் ஊகிக்கிறார்கள்.
உண்மையிலேயே
முக்கியமான பெயர்களின் பட்டியல் இருக்குமானால், சும்மா குங்குமம்
தூவிக்கொண்டிருக்காமல், நாட்டின் செல்வத்தை இப்படிக் கடத்தியவர்கள் பற்றிய
தகவல்களை முழுமையாக வெளியிடுவதே அரசின் கடமை. அதைச் செய்யாமல்,
வெளியிட்டால் உங்களுக்குத்தான் சங்கடம் என்று ஜெட்லி கூறுகிறார் என்றால்,
பட்டியலில் முன்னாள் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் இருக்கிற நிலையில்
அவர்களைக் காப்பாற்ற பேரம் நடக்கிறது என்றுதானே பொருள்? அந்த பேரம்,
“எங்களோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் வெளியிடமாட்டோம், சரியா”
என்பதான எழுதப்படாத ஒப்பந்தம்தானோ என்று மக்கள் புரிந்துகொள்ளலாமா?
நன்றி தீக்கதிர் 24.10.2014மானியம் பிச்சை அல்ல!
நீண்டகாலத்துக்குப்
பிறகு, டீசல் விலை கணிசமாகக் குறைந்திருக்கும் செய்தி முகத்தில் புன்னகையை
உருவாக்கிக் கொண் டிருக்கும்போதே, முதுகில் வலியே தெரியாமல் மயக்கமருந்து
தடவிய கத்தியைச் செருகியிருக்கிறது மோடி அரசு. சர்வதேச சந்தையில் கச்சா
பெட் ரோலியத்தின் விலை சரிந்துவிட்ட நிலையில், லிட்டருக்கு ரூ.3க்கு மேல்
குறைத்து, அந்த மகிழ்ச்சி யில் நுகர்வோர் ஆழ்ந்திருக்கும்போதே, டீசல்
விலைக்கட்டுப்பாட்டு மீதான தன்னுடைய அதிகாரத்தைக் கைவிட்டிருக்கிறது.
அதாவது, பெட்ரோல் விலையைப் போலவே இனி, டீசல் விலை நிர்ணயத்திலும் அரசு
தலையிடாது. அதாவது, அரசு மானியம் தராது; எண்ணெய் நிறு வனங்கள் நிர்ணயிப்பதே
விலை.மன்மோகன் சிங் அரசு தொடங்கிய `சீர் திருத்தம்‘ மோடி அரசிலும்
தொடர்கிறது.
மழைபெய்யும்போது வீட்டுச் சாக்கடையைத் திறந்துவீதியில்
விடும் சாமர்த்தியம்தான் இது. அமெரிக் கப் பயணத்தின்போது, `பொருளாதாரச்
சீர் திருத்த நடவடிக்கைகள்’ தொய்வில்லாமல் தொடரும் என்று மோடி வாக்குறுதி
அளித்ததன் தொடர்ச்சியாக இதையெல்லாம் பார்க்கலாம்.மானியம் என்பது பிச்சை
அல்ல; தன்னுடைய கொள்கைகளால் மெலிந்த மக்களுக்கு ஓர் அரசு தரக்கூடிய ஆதரவு.
ஒரு வகையில் அதை இழப்பீடு என்றும் கூடச் சொல்லலாம். அடுத்த இலக்கு என்ன?
உலக வர்த்தக நிறுவனம் வலியுறுத்தும் உணவு மானியச் செலவுக்
குறைப்பா?காங்கிரஸின் தொடர் வீழ்ச்சியைக் கொண் டாடும் மோடி அரசும்
பாஜகவும், காங்கிரஸை இந்த அளவுக்கு மக்கள் வெறுப்பதற்கு அது முன்னெடுத்த
இப்படியான `சீர்திருத்தக் கொள்கை கள்’தான் காரணம் என்பதை உணர வேண்டும்
நன்றி : `இந்து, தமிழ்’(அக்.22) தலையங்கத்தின் பகுதிகள்
.
புதன், 22 அக்டோபர், 2014
ஒப்பந்த ஊழியருக்கான உண்ணாநோன்பு போராட்டம் ஒத்திவைப்பு
அன்பார்ந்ததோழர்களே !தோழியர்களே !!
துணைப் பொதுமேலாளர் (நிர்வாகம்) பந்தலுக்கு நேரடியாக வந்து இச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து இதுபோன்ற நிகழ்வு பிற்காலங்களில் நடைபெறாது எனவும் உத்திரவாதம் அளித்தார். மேலும் வரும் 23-10-2014 வியாழன் அன்று உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் என இருபகுதிகளாக பிரித்து சுற்றியுள்ள ஊர்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார். அவருடன் AGM(CFA), DE (VIG) உடனிருந்தனர். அந்த அடிப்டையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
NFTE மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். P.காமராஜ் அவர்கள் தோழர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். இப்பிரச்சனையை முதன்மை பொது மேலாளரிடம் கொண்டு சென்ற நமது இரண்டு மாநில சங்கங்களுக்கும்,மிகக்குறைந்த கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று கலந்துகொண்ட அனைவருக்கும், நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்தமாத சம்பளம் மற்றும் போனஸ் இன்று வரை வழங்காமை கண்டித்து கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 21-10-2014 அன்று உண்ணாநோன்பு போராட்டம் நடைபெற்றது. தோழர்.A.அண்ணாமலை BSNLEU மாவட்டத் தலைவர், தோழர்.R.செல்வம் NFTE மாவட்டத் தலைவர் ஆகியோர் கூட்டுத் தலைமை ஏற்றனர். NFTE மாநிலதுணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார்.
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.K.T.சம்பந்தம், NFTE மாவட்டச்செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தை விளக்கிப்பேசினர். BSNLEU சார்பில் தோழர்கள் V.குமார், N.சுந்தரம், P.சேகர், E.பாலு, N.மூர்த்தி, S.பழனி TNTCWU மாவட்டசெயலர் M.பாரதிதாசன், J.முரளி NFTE சார்பில் தோழர்கள். S.தமிழ்மணி, V.இளங்கோவன், D.ரவிச்சந்திரன், TMTCLU மாவட்டத்தலைவர் M.S.குமார், TMTCLU மாவட்டச்செயலர் G.ரங்கராஜ், V.முத்துவேலு, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பண்டிகைக்காலம் என்பதையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.K.T.சம்பந்தம், NFTE மாவட்டச்செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தை விளக்கிப்பேசினர். BSNLEU சார்பில் தோழர்கள் V.குமார், N.சுந்தரம், P.சேகர், E.பாலு, N.மூர்த்தி, S.பழனி TNTCWU மாவட்டசெயலர் M.பாரதிதாசன், J.முரளி NFTE சார்பில் தோழர்கள். S.தமிழ்மணி, V.இளங்கோவன், D.ரவிச்சந்திரன், TMTCLU மாவட்டத்தலைவர் M.S.குமார், TMTCLU மாவட்டச்செயலர் G.ரங்கராஜ், V.முத்துவேலு, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பண்டிகைக்காலம் என்பதையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
துணைப் பொதுமேலாளர் (நிர்வாகம்) பந்தலுக்கு நேரடியாக வந்து இச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து இதுபோன்ற நிகழ்வு பிற்காலங்களில் நடைபெறாது எனவும் உத்திரவாதம் அளித்தார். மேலும் வரும் 23-10-2014 வியாழன் அன்று உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் என இருபகுதிகளாக பிரித்து சுற்றியுள்ள ஊர்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார். அவருடன் AGM(CFA), DE (VIG) உடனிருந்தனர். அந்த அடிப்டையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
NFTE மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். P.காமராஜ் அவர்கள் தோழர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். இப்பிரச்சனையை முதன்மை பொது மேலாளரிடம் கொண்டு சென்ற நமது இரண்டு மாநில சங்கங்களுக்கும்,மிகக்குறைந்த கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று கலந்துகொண்ட அனைவருக்கும், நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
திங்கள், 20 அக்டோபர், 2014
BSNLEU &
NFTE
மாவட்டச் சங்கங்கள், கடலூர்.
உண்ணாவிரதம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இன்று வரையில் (20-10-2014) வழங்கப்படாததை கண்டித்தும், உடணடியாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கக் கோரியும் தோழர்கள் K.T.சம்பந்தம், இரா.ஸ்ரீதர் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர் தோழர்கள் அனைவரும் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம்.
இடம்: பொது மேலாளர் அலுவலகம், கடலூர்.
தேதி: 21-10-2014,
நேரம்: காலை 9:30 மணியளவில்
ஒன்றுபடுவோம் ,,,, வெற்றி பெறுவோம்,,,,,
தோழமையுடன்
K.T.சம்பந்தம் M.பாரதிதாசன் இரா,ஸ்ரீதர் G.ரங்கராஜ்
மாவட்டச் செயலர் மாவட்டச் செயலர் மாவட்டச் செயலர் மாவட்டச் செயலர்
BSNLEU TNTCWU NFTE TMTCLUவியாழன், 16 அக்டோபர், 2014
புதன், 15 அக்டோபர், 2014
திங்கள், 13 அக்டோபர், 2014
ஞாயிறு, 12 அக்டோபர், 2014
சனி, 11 அக்டோபர், 2014
வியாழன், 9 அக்டோபர், 2014
From
To
Senior General Manager,
BSNL,
Cuddalore.1
Sir
Sub:- Requesting 1 day Special Casual Leave on 11-10-2014-reg
To
Senior General Manager,
BSNL,
Cuddalore.1
Sir
Sub:- Requesting 1 day Special Casual Leave on 11-10-2014-reg
As I have to attend the seminar on "BSNL Growth and Challenges" to be conducted during the BSNLEU 7th Circle Conference at Trichy on 11-10-2014, I may kindly be granted One day Special Casual Leave on 11-10-2014.
Thanking You,
Yours Sincerely,
மரணத்துள் வாழும் போராளி சே குவேரா

இன்று சே குவேரா நினைவு நாள்
மக்களுக்காக வாழ்ந்தவர்களின் மரணம் இமயமலையை விட கனமானது பிற்போக்காளர்களின் மரணமோ இறகை விட லேசானது - மாவோ காலனியாதிக்க ஒடுக்குமுறை களுக்கும் ஏகாதிபத்திய, முத லாளித்துவச் சுரண்டல்களுக்கும் எதிரான போராட்டத்தில் வீரமரணமடைந்த மிகச் சிறந்த மனிதர் களின் வாழ்வும் பணிகளும் படைப்புகளும் தான் விடுதலை வேட்கை யின் அடிப்படைகளாக உள்ளன. மக்களுக்காக வாழ்ந்த இப்படிப் பட்டவர்களின் வாழ்க்கையிலிருந்து படிப்பினைகளைப் பெறாமல் நமதுபோராட்டத்தில் முன்னேற முடியாது.
‘சே’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சே குவேரா அர்ஜெண்டினாவில் 1928ம் ஆண்டு பிறந்தார். அக்காலத்திய அர்ஜெண்டினா வறுமையிலும் அதன் விளைவாக சுகாதார முறை களிலும் பின்தங்கியிருந்தது. இதன்விளைவாக சே பிறந்த ஒரு சில மாதங்களிலேயே ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்டார். மருத்துவம் படித்து ஒரு சிறந்த மருத்துவராக சேவை புரிந்து பின்னாளில் மார்க்சிய லெனி னியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு புரட்சியாளாராக மாறினார்.கியூபாவிற்குச் சென்று அந் நாட்டின் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் போராளி. அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளையும் விடு தலைசெய்ய பயணித்தபோது தென்பொலிவியக் காடுகளில்அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளா லும் பொலிவிய படைகளினாலும் சதித்தனமான முறையில் கொல்லப் பட்டார்.
அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் கியூபாவின் விடுதலைக்கு வித்திட்ட வர் சே குவேரா. அவர் கொல்லப் பட்டபோது அமெரிக்க மற்றும் பொலிவியப் படைக்கு தலைமை தாங்கிய கேரி ப்ராடோ சால்மோன் என்பவனுக்கு தான் கொன்றது சேவின் உடலைத்தான், அவரது சிந்தனைகளை அல்ல என்பதும் பின்னாளில் அவர் இளைஞர்களின் மிகப்பெரிய ஆதர்ச நாயகனாக, ஒரு புரட்சியாளனின் அடையாளமாகத் திகழப்போகிறார் என்பதும் தெரிய வாய்ப்பில்லை. சே பள்ளி நாட்களிலும் மருத்து வக் கல்லுரியிலும் பயின்ற போது கல்வித் திட்ட பாடங்களை விடஉள்நாட்டு மற்றும் உலக இலக்கியங்கள், நாடுகளின் வரலாறுகள், மார்க் சிய நூல்கள் மற்றும் புரட்சிகளின் வரலாறுகள் ஆகியவற்றை அதிகமாக படிப்பதிலேயே காலத்தைச் செலவ ழித்தார். ‘சே’வை புரட்சியாளராக முழுமையாக மாற்றியதில் அவரு டைய பெற்றோர் அளித்த ஊக்கமும் கருத்து ரீதியான உரையாடல் களுமே முக்கியப் பங்காற்றின. ராணுவ யுத்த தந்திரங்களை ஆழ்ந்துபடித்த சே கியூபப் புரட்சியின் போது புதிய யுக்தியை அறிமுகப் படுத்தினார்.
அமெரிக்க ஏகாதிபத் தியவாதிகளை நடுங்க வைத்த அந்த கொரில்லா போர்த் தந்திரம்தான் இன்றுவரை பல இளைஞர் களை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறது. பிறந்திலிருந்தே பீடித்த கடு மையான ஆஸ்துமா அவருடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. சில சமயங்களில் அவர் நினை விழக்கும்படி ஆஸ்துமாவின் தாக்குதல் இருக்கும். அவருக்கு நினைவு திரும்பியவுடன் மீண்டும்புரட்சிப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுவார் என அவர் மன வுறுதி குறித்து வியப்புடன் தெரிவிக் கின்றனர் அவருடன் இருந்த சக போராளிகள். மருத்துவராக இருந்த அவர் மருத்துவத் தொழிலில் ஈடுபடவில்லை. முழுமையாக தன்னை புரட்சிப் பணிகளுக்கு அர்ப்பணித்துக் கொண்டார். மலை களிலும் காடுகளிலும் அழுக்கான உடைகளில் எந்தச் சத்தான உணவுமின்றி கடும் குளிருடனும் ஆஸ்துமாவுடனும் போராடிக் கொண்டே அவரது புரட்சிகரப் பணியை எந்தச் சமரசமுமின்றி தொடர்ந்தார்.
புரட்சிக்குப் பிந்தைய கியூபா வில் அவர் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற் றினார். கியூபாவின் நிதிக் கொள்கைஅந்நிய செலாவணிக் கை யிருப்பு மற்றும் விரிவான பொரு ளாதாரத் திட்டங்களுக்கு அவர் பொறுப்பாளாராக இருந்தார். ராணுவத்தைக் கட்டியமைப்பது, கியூபாவின் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றிலும் ஈடுபட்டார்.கடந்த 1964 டிசம்பர் 11ம் தேதி யன்று சே கியூபாவின் பிரதிநிதியாக ஐநா சபையில் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார். உலக சமாதானம் குறித்த அந்த அற்புதமான புரட்சிகரமான உரையின் சில முக்கிய பகுதிகளை பார்ப்போம்.உலகின் பல பகுதிகளில் ஏகாதிபத்தியம் தனது ஆதிக்க பாணியி லான அரசமைப்பையும் அதன் பொம்மை அரசையும் நிறுவ முயற்சிக்கிறது.
இதன் மூலம் உலக நாடுகளுக்கு இடையிலான சமாதான சகசவாழ்வை சீர்குலைக்க முயற்சிக்கிறது. எனவே ஒடுக்கப் பட்ட மக்கள் சோசலிச முகாமுடன் ஒன்றிணைந்து சமாதான சக வாழ்வு என்றால் என்னவென்று ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்களுக்கே புரியும்படி உணர்த்த வேண்டும் அவர்களின் போராட்டங்களுக்கு ஐநா சபை ஆதரவு அளிக்க வேண்டும். சமாதான சகவாழ்வு என்ற கருத்தி யல் இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு மத்தியில் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். மார்க்சியவாதிகள் என்ற முறையில் நாங்கள் சமாதான சகவாழ்வு என்பது சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையில் அல்ல ஒடுக்குபவர் களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக் கும் இடையில் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஐநாவின் அடிப்படை கொள்கைஎன்பது ஒவ்வொரு நாடும் அனைத்து வகையான காலனி யாதிக்க ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறும் உரிமையை உறுதி செய்வதே.மேற்கண்டவாறு உரையாற்றிய சே இன்றைய நாளில்தான் ஏகாதிபத்தியவாதிகளினால் கொல்லப்பட்டார். அவரது அர்ப்பணிப்புட னான வாழ்வும் மரணமும் என்றென்றும் உலக இளைய தலைமுறை யினரை வழிநடத்திச் செல்லும்.- சேது
திங்கள், 6 அக்டோபர், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)