ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பாஸ்வேர்டு’ தெரியாததால் பாதுகாப்புத்துறை தப்பித்தது மத்திய அரசின் ஆவணங்களை திருடியவர்கள் அதிர்ச்சித் தகவல்



புதுதில்லி, பிப். 21-
பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடை பெற்ற விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கள் கிடைத்துள்ளன என்று தில்லி காவல்துறை தலைவர் பாசி தெரிவித்துள்ளார்.இந்த விசாரணையானது வழக் கின் முக்கியத்துவம் கருதி சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தில்லியின் இணை போலீஸ் கமிஷனர் யாதவ், கூடுதல் கமிஷனர் அசோக் சந்த், துணை போலீஸ் கமிஷனர் பிஷம் சிங்,
உதவி கமிஷனர் மல்ஹோத்ரா மற்றும் போலீஸ் ஆய்வாளர்கள் மற்றும் துணைஆய்வாளர்கள் கொண்ட புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சனிக் கிழமையன்று பத்திரிகையாளர்களிடம் கூறிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை.இந்த வழக்கின் விசாரணையில் திருடப் பட்ட மிக முக்கிய ஆவணங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுபவை.
1. தேசிய எரிவாயு தொகுப்பு குறித்து நிதி அமைச்சரின் பட்ஜெட் பேச்சுக்கான 2 பக்க குறிப்பு;
2. எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினைச் சேர்ந்த விதேஷ் என்பவர் குறித்த ரகசியம் என்று குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்;
3. பிரதமரின் முதன்மைச் செயலர் நிபேந் திரா மிஸ்ராவின் கடிதம்;
4. பெட்ரோலிய அமைச்சகத்தின் எண்ணெய் தோண்டும் துறையின் ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டவை மற்றும் எரிவாயு குறித்த மாத அறிக்கை;
5. இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்த குறிப்பு;
6. அவசரக்கூட்டம் குறித்த ஒரு நோட்டீஸ்; மற்றும்
7. நிலக்கரி மற்றும் எரிசக்தி அமைச்சகங் களிடம் திருடப்பட்ட ஆவணங்கள் என அனைத்தும் திருடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை ரகசியமாக பராமரிக்கப்படுபவை யாகும். இதுபோன்ற எண்ணற்ற ஆவணங்கள் பல காலமாக திருடப்பட்டு ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தரப்பட்டுள்ளன. சில கம்பெனிகள் சாஸ்திரி பவானிலுள்ள கீழ்நிலை ஊழியர் களையே இந்த சட்டவிரோதச் செயலுக்காக நியமித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு கம்பெனிகளின் மூத்த உயர் அதிகாரி களும் அடங்குவர்.
வெள்ளியன்று இரவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த சக்சேனா, ஜூப்லி எனர்ஜி கம்பெனியைச் சேர்ந்த சந்திரா, ரிலையன்ஸ் அடர்க் கம்பெனியைச் சேர்ந்தஆனந்த் , எஸ்ஸார் கம்பெனியைச் சோந்த வினஸ் மற்றும் காய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நாயக் ஆகியோர் உள்ளனர்.இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120(பி)(குற்றச்சதி,)
மற்றும் பிரிவு 411 (மோசடியான முறையில் திருடப்பட்ட பொருளை வாங்கும் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப் பட்டு தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த வழக்கில் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஊழியர் லோகேஷ் என்பவர் தேடப் பட்டு வருகிறார்.
பாதுகாப்புத்துறை தப்பித்தது
பெட்ரோலிய அமைச்சகத்தில் கைதான ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ரகசிய ஆவணங்களை திருடவும் முயற்சித்துள் ளனர். விசாரணையில் அவர்கள், பாதுகாப்புத்துறையின் கணிப்பொறியின் ரகசிய கடவுச் சொல்லை கண்டறிய முடியவில்லை என்று கூறியுள் ளனர். இந்த கூற்று உண்மையா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சந்தேகிக்கப்படும் தனியார் மின்சாரக் கம்பெனிகளின் உயர் அதி காரிகளின் தொலைபேசி உரையாடல்கள் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
இது வரை 100க்கும் மேற்பட்ட உரை யாடல்கள் பதிவு செய்யப்பட்டு அவை அலசி ஆராயப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் சாதாரணமப்பா...
இதுபோன்று ஆவணங்களை திருடுவது சர்வசாதாரணமான ஒன்று என பெருமுதலாளிகளின் அமைப்பான இந்திய தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.35 விழுக்காடு கார்ப்பரேட் கம்பெனிகள் ஆவணங்களை திருடுவதில் ஈடுபட்டு வருகின்றன. பெட்ரோலிய அமைச்சகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து அமைச்சகத்திலிருந்தும் முக்கிய ஆவணங்களை திருடுவது பல பத்தாண்டுகளாகவே நடைபெற்று வருகிறது என இந்திய தொழிற்கூட்டமைப்பின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்தந்த அமைச்சகங்களின் ஊழியர்கள் மட்டுமல்ல,
அமைச்சகத்திலுள்ள உயர் அதிகாரிகளும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அந்தந்த அமைச்சகங்களின் சில குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரை மாதச் சம்பளம் போன்று கையூட்டைப் பெற்று வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. 
நன்றி தீக்கதிர் 22.௦2.2௦15

தமிழ் மாநில FORUM கூட்ட முடிவுகள் . . .

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
சென்னையில் 20.02.15 அன்று நடைபெற்ற   தமிழ்  மாநில FORUM கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள  முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண ..கிளிக் செய்யும்   

சனி, 21 பிப்ரவரி, 2015

சேவைத் துறை தொழிற்சங்கங்களின் வழிகாட்டும் குழு உறுப்பினராக நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தேர்வு-

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
சேவைத் துறை தொழிற்சங்கங்களின் வழிகாட்டும் குழு உறுப்பினராக நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தேர்வுசெய்யப்பட்டுள்ளார் அவரது  பணி சிறக்க நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள். இது குறித்த மாநில சங்கத்தின் சுற்றறிக்கை காண இங்கே   << click >> செய்யவும்

சனி, 14 பிப்ரவரி, 2015

தோழர். S.K.வியாஸ் காலமானார்


தோழர். S.K.வியாஸ் காலமானார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.தோழர்.S.K.வியாஸ் மத்தியரசுஊழியர்களின் ஒரு ஒப்புயர்வற்ற தலைவராகும். அவர் 13.02.2015 அன்றுஇரவு 08.30 மணிக்கு ஜெய்பூர் மருத்துவ மணையில் காலமானார். அவர்சில நாட்களுக்கு முன்பாக இருதய வலி காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது உடல் நலம் தேறிவந்தஅவருக்கு திடிரென உயிர் பிரிந்தது. அவருக்கு தற்போது 85வயதாகிறது. தோழர். S.K. வியாஸ் 1967 முதல் பல ஆண்டுகள் மத்தியஅரசு ஊழியர்களின் கூட்டமைப்பின்Secretary General ஆக திறம்படபணியாற்றிய தலைவராகும். தோழர்.S.K. வியாஸ் அவர்களின் இறுதிசடங்கு ஜோத்பூரில் நடைபெறும். தோழரின் இறப்பு ஈடுகட்ட முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும், தோழர்களுக்கும் நமது கடலூர் மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.தோழர்.S.K. வியாஸ் அவர்களின் மறைவிற்கு நமது செவ்வணக்கம் உரித்தாகட்டும் .

வியாழன், 12 பிப்ரவரி, 2015

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை - 20

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!! 

 நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் மத்திய சங்கத்தின் பல்வேறு செய்திகள் அடங்கிய  சுற்றறிக்கை எண்  - 20 வெளியிட்டுள்ளது... 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர் R.V.ஜெயராமன் அவர்களுடைய தாயார் திருமதி சாவித்திரி அம்மாள்(85) இன்று 1௦.௦2.2௦15 காலை 5.௦௦ மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறோம். நல்லடக்கம் இன்று மாலை 4.௦௦ மணிக்கு கடலூரில் நடைபெறும்.

சனி, 7 பிப்ரவரி, 2015

7.2.2015அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற TNTCWU அமைப்புதின கொடியேற்று நிகழ்ச்சியின் சில காட்சிகள்



கடலூர் பொதுமேலாளருடன் பேட்டி (FORMAL MEETING)

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
05.02.2015 அன்று நமது மாவட்ட நிவாகத்துடன் "FORMAL MEETING" நடைபெற்றது. மாவட்ட செயலருடன் தோழர்கள் A.அண்ணாமலை, G.S.குமார்,S.பரதன் ஆகியோர் பங்கேற்றனர்.நமது பொதுமேலாளரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது.நாம் கொடுத்த ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கும்,  சேவை மேம்பாட்டிற்கும் உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தோடு பேட்டி நிறைவுற்றது.

தீர்க்கப்பட்டுள்ள பிரச்சனைகள்
 

1)நெய்வேலி ஊழியர்கள் குடியிருப்பில் நீரேற்று மின்மோட்டார் சரிசெய்யப்பட்டுள்ளது மேலும் பைப் லைன் வால்வுகள் மாற்றப்பட்டுள்ளது.
2)தோழர் V.S.பாலாஜி TTA அவர்களுக்கு கண்பர்மேஷன் உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.
3)நமது சங்க அலுவலகத்திற்கு புதிய கணினி வழங்கஉத்திரவிடப்பட்டுள்ளது.

ஏற்கப்பட்டுள்ள நமது கோரிக்கைகள்
1) 31.03.2015 க்குள் சீருடை வழங்கப்படும்.

2) 2௦ சத ஊழியர்களுக்கு முதல் காலாண்டிலும் அடுத்தடுத்த காலாண்டுகளில் முறையே 2௦ சத ஊழியர்களுக்கும் "TOUR BAG" வழங்கப்படும்.

3)கள்ளக்குறிச்சி பகுதியில் கேபிள் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியத்தை ஒப்பந்ததாரரிடமிருந்து பெற்றுக்கொண்டு பட்டுவாடா செய்யாத கள்ளக்குறிச்சி வெளிப்புற அதிகாரிமீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

4)தோழர் K.ராஜேஷ்TTA - G.V.ஸ்ரீதர்TTA மியுச்சுவல் மாற்றல் வழங்கப்படும்.

5)தோழியர் S.சிவகாமி TTA வுக்கு அம்மேரி TO நெய்வேலி தற்காலிக மாற்றல் வழங்கப்படும்
.
6)தோழர் K.மண்ணாங்கட்டி TTA வுக்கு சங்கராபுரம் TO கள்ளக்குறிச்சி மாற்றல் வழங்கப்படும்.

7)தோழர்கள் P.ராஜசேகர் STS கடலூர்,ஜெயச்சந்திரன் TM கடலூர்,நவாப்ஜான் TM கடலூர்,L.சையத்சம்சுதீன் TM சுலாங்குரிச்சி ஆகியோர்களது மருத்துவ பில்கள் பட்டுவாடா செய்யப்படும்.

8)12.௦2.2௦15 அன்று கடலூரில், கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கான " WORKS COMMITTEE" கூட்டம் நடத்தப்படும்.

9)கடலூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் செல் சிக்னல் பிரச்சனைகள் தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

1௦)செல்சேவை விரிவாக்கத்திற்காக கள்ளக்குறிச்சி மலையக பகுதிகளான கண்ணூர்,எழுத்தூர்,மணியார்பாலயம்,முண்டியூர்பகுதிகள் பயன்பெறும் வகையில் இரண்டு புதிய BTS கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

11) தரைவழி இணைப்புகள் வழங்கிட கடலூர்,கள்ளக்குறிச்சி,மற்றும் சிதம்பரம் பகுதிகளில் உள்ள TNF அனைத்தும் வழங்கிட அந்தந்த கோட்ட பொறியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

பரிசீலனைக்கு உரியவை
தோழியர் R.ஷீலா TM கடலூர் புதுவை மாற்றல்
தோழர் E.C.கண்ணன் TM மண்மலை அவர்களின்  NEPP

நமது கோரிக்கைகளை பரிவுடன் கேட்டு சட்ட விதிகளுக்குட்பட்டும்,மனிதாபிமான அடிப்படையிலும் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்ட நமது முதுநிலை பொதுமேலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொல்கிறோம்.
                                                                           தோழமையுடன் 
                                                                              K.T.சம்பந்தம்

புதன், 4 பிப்ரவரி, 2015

பாசிசத்தின் இந்திய முகங்கள்



தற்போதைய தேசியவாத கவர்ச்சிச் கோஷங்கள் அனைத்தும் 1930களின் பாசிச வரலாற்றோடு இணைந்தவைகளாக உள்ளன. நரேந்திர மோடி இதை பாரம்பரிய கொடையாக கருதுகிறார். ஆர்எஸ்எஸ் ஒரு பாசிச சக்தி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தனது கைப்பாவையான பிஜேபியின் மீது கடந்த 10 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ்-சின் பிடி மேலும் இறுகியுள்ளது. ஆளுங்கட்சி மீது பாசிசம் செல்வாக்கு பெறும் போது அரசியல் சாசனத்தின் செயல்பாடு சிதைந்து போகிறது. மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு, தலைமையின் மௌனம், சுதந்திரமான நிர்வாகப்பணிகள் மீது தாக்குதல், இப்படி இந்தியாவின் அமைச் சரவை ஆட்சி முறை நொறுங்கிக் கொண்டிருக்கிறது. தனது சிறந்த நூலான `மதச்சார்பற்ற நாடாக இந்தியா’வில் அதன் ஆசிரியர் டொனால்டு ஈஜின் ஸ்மித் இப்படி கூறுகிறார். “ஐரோப்பிய பாசிசத்தின் இந்திய வடிவம்தான் இந்து அடிப்படைவாதம் என நேரு ஒரு முறைகூறினார். ஆர்எஸ்எஸ்க்கும் கொடுந்தேசியவாதத்தை முன்வைக்கும் பாசிசத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. ராணுவவெறிமயமாக்கல், இன கலாச்சார உயர்வுக் கொள்கை மதவெறிபாய்ச்சிய தீவிர தேசியவாதம், பழமைச்சுவடுகளை பயன்படுத்துதல், மத-இன சிறுபான்மை மக்களை தேசியக் கொள்கை களிலிருந்து விலக்கி வைத்தல் இப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ்-இன் இயல்புகள்ஐரோப்பிய பாசிசத்தை நினைவூட்டுகின் றன. ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனது இலக்கை அடைய முடியும் என்பதை ஆர்எஸ்எஸ் நிராகரிக்கிறது. பதிலாக இந்து சமூகம் தனக்குள்ளிருந்து புத்துயிர்ப்பு பெற்றுஎழுந்து வரவேண்டும் என திட்டமிடுகிறது”. இத்தாலிய ஆராய்ச்சியாளர் மார்ஸியா கசோலாரி எழுதிய “1930களில் இந்துத்வாவின் வெளிநாட்டு த்தொடர்பு” மற்றும் “அரசியலில் இந்து தனித்துவத்தை உருவாக்கு வதில் வாரணாசியின் பாத்திரம்” என்னும்கட்டுரைகளை எக்கானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வெளியிட்டிருந்தது. மார்ஸியா கசோலாரி “இந்திய தேசியவாதத்திற்கும் நாஜிகளின் பாசிசத்திற்கும் இடையில் உள்ள சந்தேக உறவு” என்னும் நூலையும் எழுதியுள்ளார். “பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள், அலுவலகக் கோப்புகள் மற்றும் சுற்றுக்கு விடப்பட்ட இதர ஆவணங்களில் 1920-லிருந்து1940க்கு இடைப்பட்ட காலக்கட்ட பாசிசத்தின் மேல் இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு ஈர்ப்பு இருந்தது. முசோசலினியின் கட்டுரைகள், அவரது வாழ்க்கை வரலாறு ,கோஷங்கள் இந்தக் குழுக்களுக்குள் சுற்றுக்கு விடப்பட்டன. 1938ல் சாவர்க்கர் தலைவராக இருந்த காலத்தில் நாஜி ஜெர்மனிதான் இந்து மகாசபைக்கு பொருத்தமான முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. இனம் தொடர்பான நாஜிகளின் கொள்கைகள்தான் இந்தியாவில் முஸ்லிம் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு கடைப்பிடிக்கப்படவேண்டும் இந்துவெறி அமைப்புகள் இரண்டு முக்கிய அரசியல் பாதைகளை 1920-1940 காலத்தில் தேர்ந்தெடுத்திருந்தன. ஒன்று ஐரோப்பிய பாசிச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த இனம் சார்ந்த கருத்துருவாக்கத்தை போல சக்தியான சொல்லாடல்கள் மூலம் இந்துத்வா நோக்கத்தை உச்சத்திற்கு கொண்டு செல்வது. மற்றொன்று இந்து சமுதாயத்திடம் கட்டுப்பாட்டுணர்வு குறைவாக இருப்பதாக குறிப்பிடும்படியான முயற்சிகள் மூலம் மக்களை நம்பவைப்பது. அவர்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் எதிர்ப்பு இலக்குடன் இந்து சமுதாயம் ராணுவ வெறியூட்டப்படவேண்டும். 1920-களிலிருந்து முஸ்லிம்கள்தான் முதன்மையான இலக்காக கருதப்பட்டு பிரிட்டிஷாரை விட அபாயகரமானவர்கள் என முஸ்லிம்கள் கூர்ந்து கவனிக்கப் பட்டனர்” நூல் நெடுகிலும் மார்ஸியா தனது கருத்தை ஆவணங்களின்வழி கூறுவதில்கவனமாக-நிதானமாக இருந்திருக்கிறார். காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக் கும் பங்கு இருந்தது என உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். கபூர் முடிவுக்கு வந்திருந்தார். இதன் காரணமாகவே ஆர்எஸ்எஸ்- ஜனசங்கத்திற்கும் இடையே கருத்துவேறுபாடு உருவானதாக இட்டுக்கட்டப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராய்ச்சியாளர் மார்ஸியா உடைத்தெறிந்துள்ளார்.“கே.பி.ஹெட்கேவாரை தவிர்த்து பி.எஸ்,மூஞ்சே, எல்.வி.பரஞ்சாபி, பாபாராவ் சாவர்க் கர் மற்றும் சிலரைக் கொண்டதுதான் இந்து மகாசபை. ஒரே அரசியல் கொண்ட இந்த ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ். ஹெட்கேவார் 1925 இல் சாவர்க்கரை ரத்னகிரி சிறையில் சந்தித்து ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்குவதற்கு அறிவுரைகளை கேட்டார்”. பி.எஸ்.மூஞ்சே இந்து மகாசபை-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பாலமாக செயல்பட்டவர். இவர் 19.3.1931 அன்று ரோம் நகரில் முசோலினியை சந்தித்தார். அவரிடம் ஆர்எஸ்எஸ் போல குறிக்கோள் கொண்ட சுதந்திரமான ஒரு அமைப்பை நான் துவங்கியுள்ளேன் என முசோலினியிடம் தெரிவித்தார்.“இத்தாலியில் பாசிஸ்ட்கள் ஜெர்மனியில் நாஜிகளைப் போல இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாவோம் என இந்துத்வாகருதுவதாக ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அறிக்கை கூறியது. 23.6.1934-ல் நடைபெற்றபம்பாய் இந்து மகாசபை மாநாட்டில் ஆர்எஸ் எஸ்-ஐ உருவாக்கிய ஹெட்கேவாரை பாராட்டியது. ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 பேர் கொண்ட குழுவினை மாநாடு நியமித்தது. அதில் என்.டி. சாவர்க்கரும் என்.சி.கேல்கரும் அடங்குவர்”. இந்து மகாசபைக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் இடையே இருந்த உறவிற்கு இது மேலும் ஒரு ஆவண சாட்சியமாகும். “பம்பாய் மாநாட்டிற்கு பிறகு சாவர்க்கர் ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். இக்கூட்டங்களில் பங்கேற்ற மத தீவிரவாதிகளையும் சாவர்க்கர் வெளிப்படையாக பாராட்டவும் செய்தார். இக்கூட்டங்களில் ஹெட்கேவாரின் பங்கை பாராட்டவும் சாவர்க்கர் தவறவில்லை. 29.7.1939 அன்று புனேயில் குருபூர்ணிமா ஆர்எஸ்எஸ் விழாவில் சாவர்க்கர் உரையாற்றினார். சில ஆண்டுகளுக்கு பிறகு27-29.5.1943 மூன்று நாட்கள் மூஞ்சே தலைமையில் கோல்வால்கர் முன்னிலையில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. சாவர்க்கர் அதில் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பெருமை பொங்க உரையாற்றினார்”. ஹிட்லரை விமர்சனம் செய்ததற்காக நேருவை சாவர்க்கர் கடுமையான தாக்கிப்பேசியதோடு செக் நாட்டின் சூடன்டெண்லேண்ட் நகரை ஹிட்லர் ஆக்கிரமித்த தையும் அவரது யூதக்கொள்கையையும் ஆதரித்தார். இந்திய முஸ்லிம்கள் அந்த திசைவழியில்தான் நடத்தப்படவேண்டும் என விரும்பினார்.“ஆரியக் கலாச்சாரத்தை புதுப்பிக்கும் பெருமைமிக்க ஜெர்மனியின் கொள்கையை, ஸ்வஸ்திகாவின் புகழை, ஆரியக்கல்விக்கான ஆதரவு மற்றும் இந்திய ஜெர்மானிய கலாச்சாரத்தின் வெற்றியை உணர்வுமிக்க இந்திய இந்துக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்” என 25.3.1939 அன்று இந்து மகாசபை கூறியது. “நேரு தலைமையிலான ஒரு சில சோசலிஸ்ட்டுகள் ஜெர்மனிக்கு எதிரான கோப நீர்க்குமிழிகளை தோற்றுவிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் அது எடுபடவில்லை. ஜெர்மனியின் தவிர்க்கமுடியாத வலிமைக்கு முன்னே மகாத்மா காந்தியின் சாபம் எதுவும் பலிக்காது, ஆரிய கலாச்சாரத்தின் எதிரிகளோடு ஜெர்மனி நடத்தும் புனிதப்போர் உலகமெங்கும் உள்ள ஆரிய இன நாடுகளை சிந்திக்க வைக்கும்”. சங் பரிவாரம் நாட்டின் விடுதலை இயக்கத்தில் பங்கேற்கவில்லை. 9.9.1939 அன்று சாவர்க்கர் வைஸ்ராய் லின்லித்கோவை சந்தித்தார். பிரிட்டிஷ் அரசுடன் ஒரு உடன்பாடு செய்து கொள்ளவிரும்புவதாகத் தெரிவித்தார். “அவர் (சாவர்க்கர்) மாட்சிமை பொருந்திய மன்னர்பிரானின் அரசு இந்துக்கள் பக்கம் திரும்பவேண்டும். அவர்கள் ஆதரவுடன் வேலை செய்யவேண்டும். கடந்த காலத்தில் என்னதான் இந்துக்களுக்கும் நமக்கும் உறவில் பிரச்சனைகள் இருந்தாலும் பிரிட்டன்-பிரெஞ்ச் உறவைப்போல சமீபத்திய நிகழ்வுகள் காட்டும் ரஷ்யா-ஜெர்மனி உறவுகளை போல உண்மையில் சரிசமமானது. இந்துக்கள் பிரிட்டனின் நட்புறவோடு தற்போதைய நமது நலன்கள் பிணைந்துள்ளதால் பழைய பகைமைகள் இனி தேவையில்லை”. மார்ஸியாவின் நூலுக்கான கருத்துரைகள், குறைவாகவும் எல்லைக்குட்பட்டும் முழுநிறைவான ஆவணமாக உள்ளது குறிப்புரைகள் ஆழ்ந்த நோக்கை பிரதிபலிப்பவைகளாக உள்ளன. நூலில் எதிரி என்பதன் கோட்பாடு இந்திய தேசியத்திற்கும் இந்து தேசியத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குவதாக உள்ளது. முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரசின் இந்திய தேசியம் என்பதன் கருத்தெல்லை பிரிட்டிஷாரை எதிரியென நிறுத்துவதற்குரியதாக இருந்தது. 1930களில் காங்கிரசை விட்டு விலகி தனது தனிப்பட்ட கொள்கைகளை முஸ்லிம் லீக் உருவாக்கத்துவங்கியது. தனக்கென ஒரு நாட்டின் திட்டத்தையும் உருவாக்கிவளர்க்கத் தொடங்கியது. ஆயினும் இந்தக்கொள்கைகள் சகோதரப்படுகொலையை ஆதரிக்கவில்லை. அதே சமயத்தில் முஸ்லிம்களுக்கான தனிநாடு உருவாவது இந்துக்களின் எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சரியோ தவறோ இந்திய முஸ்லிம்களின் நலன்களை எடுத்துக்கூறும் கொள்கை பலவீனத்திற்கான பரிகாரமாகத்தான் புதிய நாடு உருவாவதை அவர்கள் கண்டனர். சங்பரிவாரத்தின் அடாவடித்தனமான முஸ்லிம் எதிர்ப்புப் பேச்சுக்கள் ஒரு வன்முறைச் சூழலை உருவாக்கியதோடு முஸ்லிம் குழுக்கள் மத்தியில் பிரிந்துசெல்லும் மனநிலையை வளர்த்தன. நாடு முழுவதும் தனி நாடு அறைகூவலை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பியது. இந்தப் பிரிவினைக்கு சங்பரிவாரமும் காங்கிரஸ் கட்சியிலிருந்த அதன் அனுதாபிகளும்தான் பொறுப்பாகும். 4.11.1948 அன்று டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசன வரைவை முன்மொழிந்து பேசும்போது அரசின் நிர்வாக அமைப்பு அரசியல் சாசனத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டார். அரசு நிர்வாக முறை என்பதன் புரிதல் அரசியல் சாசனத்தின் உன்னத நெறிகளின் மிகச்சரியான புரிதலோடும் இணைந்திருக்க வேண்டும். வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் அரசியல் சாசன விதிகளை திருத்தாமலே நிர்வாக முறையில் மாறுதல் செய்வதன் மூலம் அரசியல் சாசன விதியை பொருத்தமாற்ற தாக்கி சிதைத்து அதன் சாரத்திற்கு எதிராகமாற்றிவிடவும் முடியும். நரேந்திர மோடி உள்பட 19 மத்திய அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ளனர். இந்து ராஜ்யத்தை ஏற்படுத்த இவர்கள் அரசியல் சாசனத்தை திருத்தவேண்டியதில்லை. சங்பரிவாரத்தின் ஒரு குரு சியாமா பிரசாத் முகர்ஜி இவர்களுக்கு ஒரு பாதையையும் காட்டியுள்ளார். 6.1.1946 தேதியின்அவரது நாட்குறிப்பில் “75 சதம் இந்துக்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் விரும்பினால் ஜனநாயக வடிவ அரசை ஏற்க முடியும். அதில் முக்கிய பாத்திரத்தையும் வகிக்கமுடியும்”. இதுதான் பெரும்பான்மைவாதம் என்பது. தொடர்ந்து நிர்வாக ஆணைகளின் மூலம் மதச்சார்பின்மை கோட்பாட்டை கிழித்தெறிந்துவிட்டு புதிய சூழ்நிலையை உருவாக்க முடியும். அரசு நிர்வாகத்தின் வடிவம் மாற்றப்பட்டு வருகிறது. அதே வேளையில் அரசியல் அமைப்புச் சட்டம் இப்போது தாக்குதலுக்குள்ளாகியும் இருக்கிறது. நன்றி: பிரண்ட்லைன் 23.1.2015தமிழில் சுருக்கம்: ப.தெட்சிணாமூர்த்தி

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வந்தாருய்யா வந்தாரு... ஒபாமா அய்யா வந்தாரு!

c



ஒபாமா இந்தியா வந்துவிட்டுப் போய் ஒரு வாரத்துக்கு மேலாகியும் பரபரப்பு இன்னும் ஓயவில்லை. பரபரப்பைக் கிளப்புவதற்கு நோபல் பரிசு ஏதேனும் இருந்தால் அதைப் பெற எல்லாத் தகுதியும் உடைய நரேந்திர மோடி விட்ட ராக்கெட்டல்லவா? ஜன்தன் யோஜனா, ஸ்வச் பாரத் போன்ற அவரது அதியற்புத சாதனைகள் வரிசையில் ஒபாமா விஜயமும் சேர்க்கப்பட்டுவிட்டது. இவர் அவரை `பராக்’ என செல்லமாக அழைக்க, அவர் இவரை `சாயாவாலா’ எனப் பிரியமுடன் விளிக்க.. பள்ளி நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்டதுபோல் அவர்களிடையே பாசமழை பொழிய, இந்தியாவே விக்கித்து நின்றது.ஆனாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்ற பாடலைக் கொள்கையாக வரித்துக்கொண்ட அமெரிக்க அதிபர்கள் தங்கள் நாட்டுத் தேவைகளை ஒரு கணமும் மறப்பார்களா? ஒபாமாவும் மோடியும் தனிமையில் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது பரம ரகசியம். அதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட நமது நிருபர் அதை இங்கே பிட்டுப் பிட்டு வைக்கிறார். வேறு ஊடகங்களில் வராத உரையாடல் இது.

ஒபாமா : மேட் இன் அமெரிக்கா என்பது உலகம் பூரா ஏற்றுக் கொண்ட பொருளாதாரம். நீங்க என்ன புதுசா மேக் இன் இந்தியான்னு கரடி விடறீங்க? எங்களைச் சீண்டிப் பாக்கறீங்களா? மோடி : அய்யய்யோ! அப்படி ஏதும் தப்புக்கணக்குப் போட்டுராதீங்க.. நான் ஏன் `மேட் இன் இந்தியா’ன்னு சொல்லாம`மேக் இன் இந்தியா’ன்னு சொல்றேங்கறதை நீங்க கவனிக்கணும். நீங்க எங்களுக்காகத் தயாரிச்ச பொருள் எதுவானாலும் அதை மேக் இன் இந்தியான்னு நாங்க சொந்தம் கொண்டாடிக்குவோம். கண்டுக்காதீங்க ஒபாமா : வெரி குட்! இதை அப்படியே மெயின்டைன் பண்ணிக்குங்க.. அமெரிக்காவுல தயாரிச்ச அணு உலைகள் ஏராளமாக் கிடக்கு. அங்கே யூஸ் ஆகாது. இந்தியாவுக்குக் கப்பல்ல ஏத்தி அனுப்பத் தயாரா வச்சுட்டுத்தான் கிளம்பினேன். உங்களை ஒரு வார்த்தை கேட்டுட்டு ஏத்த வேண்டியதுதான்.. மோடி: என்ன வார்த்தையெல்லாம் சொல் றீங்க .. என்னை ஒரு வார்த்தை கேக்கணும்னு சொன்னதே போதும். அந்தப் பெருந்தன்மையைப் பாத்து நான் பூரிச்சுப்போய் நிக்கறேன். ஒரு ரிக்வெஸ்ட். அணு உலை மேலே `மேட் இன் அமெரிக்கா’ன்னு எழுதிட வேணாம். இங்கே அனுப்புங்க. நான் `மேக் இன் இந்தியா’ன்னு எழுத ஏற்பாடு பண்ணிக்கறேன். ஒபாமா : அணு உலையிலே விபத்து ஏதும் நடக்காதுன்னு காரண்ட்டி, வாரண்ட்டி ஏதும் நான் கொடுக்க முடியாது. ஒரு வேளை விபத்து ஏதும் நடந்தா எங்களை எதுவும் நீங்க கேக்கக் கூடாது. அதை எப்படி சமாளிக்கறதுங்கறது உங்க கவலை! மோடி : கவலையை விடுங்க! எங்க பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள்லாம் எதுக்கு இருக்கு? அவங்க கிட்ட பாலிசி எடுத்துக்கறோம். மிச்சம் மீதி துண்டு விழுந்தா, கவன்ர்மெண்ட் ஃபண்ட்லேருந்து கொடுத்துக்கறேன். எங்க நாட்டுப் பாரம்பரியம் ஒண்ணு இருக்கு. பெரிய விபத்திலே சிக்கிக்கிட்டவங்களுக்கு நஷ்ட ஈடு எதுவும்நாங்க கொடுக்கறதில்லே. நஷ்டஈடு கேட்டுக்கேட்டுப் போராடி ஒவ்வொருத்தரா சாகறவரை நாங்க அப்படியே விட்டுருவோம். போபால் படுகொலையிலே, சாரி, விபத்துலே, அதை நாங்க நிரூபிச்சுக் காமிச்சிருக்கோம்.ஒபாமா : வெரி குட், வெரி குட்! கீப் இட் அப்! இன்னொரு விஷயம். அணு குண்டு தயாரிக்க மாட்டோம்னு நீங்க சொன்னாப் போதாது. அதை நாங்க அப்பப்ப வந்து இன்ஸ்பெக்ட் பண்ணணும்...மோடி : இதை நாங்க வெளியே சொன்னா என் இமேஜ் என்ன ஆறது? நீங்க நேரடியா வந்து இன்ஸ்பெக்ட் பண்ண வேணாம். உங்களுக்கு நம்பிக்கையா உள்ள வேற யாரையாவது அனுப்புங்க. நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன். ஒபாமா : ஓகே, ஓகே! அடுத்தது, குஜராத் பாணி படுகொலைகளை நீங்க அடியோட மறந்துரணும். மதக்கலவரம் ஏதாவது நடந்தா எங்க வியாபாரம் பாதிக்கும். அண்டர்ஸ்டாண்ட்? மோடி : அடி மடியிலேயே கை வைக்கறீங்கறீங்களே! முஸ்லிம்கள், கிறிஸ்தவங்க மேலே அப்பப்ப வெறுப்பைக் கிளப்பிவிட்டாதான் நாங்க இந்து ஓட்டுக்களைத் தக்க வச்சுக்க முடியும். உலகத்திலே எங்கயாவது சண்டை நடந்துக்கிட்டிருந்தாத்தானே உங்க ஆயுதங்களை நீங்க விக்க முடியுது? அது மாதிரிதான் இது. ஒபாமா : புரியுது, புரியுது.. நாங்க உலக சமாதானத்தைப் பத்தி பேசற மாதிரி, நீங்க மதநல்லிணக்கம் பத்தி பேசிக்கிட்டே உங்க வேலையைப் பாருங்க. அதே சமயம் எங்க வியாபாரம் பாதிக்காமயும் பாத்துக்குங்க.மோடி : எப்பப்ப எந்த வேஷம் போடணும்கறதிலே நாம ரெண்டு பேருமே கில்லாடிங்கதானே? சமாளிப்போம்! ஒபாமா : அப்ப நான் போய்ட்டு வரேன். அமெரிக்கத் தொழிலதிபர்கள் இன்னும் மூணுநாளைக்கு இங்கே இருப்பாங்க. அவங்களை மனம் குளிர, சந்தோஷமா அனுப்பிவைக்க வேண்டியது உங்க பொறுப்பு. விவசாயத்துக்கு நாங்க மானியம் கொடுக்கற மாதிரி நீங்களும் கொடுக்கணும்னு நினைக்காதீங்க. நாங்க வேற.. நீங்க வேற.. அதை மறந்திராதீங்க. மோடி: மறப்பேனா? இங்கே பேசினதெல்லாம் நம்மோட இருக்கட்டும். வெளியே போகும்போது சிரிச்சுக்கிட்டே போஸ் குடுக்கணும். நான் உங்க தோள்மேலே கைபோட்டுக்கிட்டே வருவேன். தப்பா நினைக்கக் கூடாது. மத்ததை நான் பாத்துக்கறேன்.(இருவரும் சிரித்தபடியே வெளியே வருகின்றனர்.)---தீக்கதிர்.








எழுச்சிகரமான கடலூர் கருத்தரங்கம்

 எழுச்சிகரமான கடலூர் கருத்தரங்கம் , மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

கடலூர் கருத்தரங்கத்தின் சில காட்சிகள் பார்க்க :-Click Here

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

அரகண்டநல்லூர் பகுதியில் நம்மோடு இணைந்த தோழர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.மாவட்ட சங்கத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
அரகண்டநல்லூர் பகுதியில் நமது கிளைச்சங்கத்தில் கீழ்கண்ட தோழர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.புதியதாக இணைந்துள்ள அனைவரையும் மாவட்ட சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.

தோழர் D.பொன்னம்பலம் TM
தோழர் R.தினகரன் TM
தோழர் K.குமார் TM
தோழர் R.ஏழுமலை  TM
தோழர் C.வனத்தையன் TM
தோழர் R.சுந்தரமூர்த்தி TM
                                                                                      தோழமையுடன் 
                                                                                      K.T.சம்பந்தம் 
                                                                                        மாவட்டசெயலர்